ஜமாத்தே
இஸ்லாமி கட்சியை சேர்ந்த
முன்னாள் எம்.பி.
ஷகாவத் ஹுசைனுக்கு மரண தண்டனை
வங்கதேசத்தில்,
1971ல் நடந்த
போர்க்குற்றம் தொடர்பான வழக்கில், முன்னாள், எம்.பி.,க்கு,
மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில்,
ஷேக் ஹசீனா
பிரதமராக உள்ளார்.
கடந்த, 1971ல், வங்கதேச சுதந்திர போராட்டத்தின்போது
நடந்த போர்க்குற்றச்
செயல்களில் தொடர்புடைய, ஜமாத்தே இஸ்லாமி உள்ளிட்ட
கட்சிகள் மற்றும்
அமைப்புகளுக்கு எதிராக, அவர் நடவடிக்கை எடுத்து
வருகிறார்.
இந்நிலையில்,
ஜமாத்தே இஸ்லாமி
கட்சியை சேர்ந்த
முன்னாள் எம்.பி., ஷகாவத்
ஹுசைன், சுதந்திர
போராட்ட காலத்தில்,
ஆள் கடத்தல்,
கொலை, கற்பழிப்பு
உள்ளிட்ட குற்றச்
செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த,
சர்வதேச குற்றவியல்
சிறப்பு தீர்ப்பாயம்,
ஷகாவத் ஹுசைனுக்கு,
நேற்று மரண
தண்டனை விதித்து,
தீர்ப்பளித்தது.




0 comments:
Post a Comment