“Helping Children Go Back
To School”
நிகழ்ச்சித் திட்ட அறிமுகம்
அண்மையில்
ஏற்பட்ட வெள்ளம்
மற்றும் மண்சரிவு
பேரனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இதுவரை பாடசாலை உபகரண
உதவிகளை பூரணமாகப்
பெற்றிராத மாணவர்களுக்கு
உதவிக் கரம்
நீட்டும் முகமாக
IiWords (Islamic Inspiring Words) எழுத்தாளர்
இயக்கமும் ஸ்ரீ
லங்கா இஸ்லாமிய
மாணவர் இயக்கமும
(slism) இணைந்து மேற்கொண்டுவரும் Helping Children Go Back To School நிகழ்ச்சித் திட்டத்தின்
ஊடக மாநாடும்
திட்ட அறிமுக
நிகழ்ச்சியும் நேற்று ஆகஸ்ட் 16ம் திகதி
பி.ப
5.30 முதல் பி.ப 6.30 வரை தாருல்
ஈமான் கேட்போர்
கூடத்தில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில்
விஷேட அதிதிகளாக
கௌரவ பாராளுமன்ற
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், BCAS கல்வி நிறுவனத்தின்
தவிசாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கௌரவத்
தலைவருமான அப்துர்
ரஹ்மான், புரவலர்
ஹாஷிம் உமர்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கௌரவ செயலாளர்
நஜாஹ் முஹம்மத்
ஆகியோர் கலந்து
சிறப்பித்ததோடு IiWords எழுத்தாளர் இயக்க
உயர்மட்ட உறுப்பினர்களும்
ஸ்ரீ லங்கா
இஸ்லாமிய மாணவர்
இயக்க உயர்பீட
உறுப்பினர்களும் ஊடக பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில்
வரவேற்புரையை நிகழ்த்திய IiWords எழுத்தாளர்
இயக்கத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஸெனீபா
ஸனீர் அவர்கள்,
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னணியையும் அதற்கான நிதிதிரட்டிய
முறைமையையும் தனதுரையில் சுட்டிக் காட்டினார். LaunchGood நிதிசேகரிப்பு தளத்தினூடாக கடந்த மாதத்தில்
இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக சுமார் 11 இலட்சம் ரூபா
நிதி சேகரிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிகழ்ச்சித்
திட்டத்தை நடைமுறைப்படுத்தும்
ஸ்ரீ லங்கா
இஸ்லாமிய மாணவர்
இயக்கம் குறித்த
அறிமுகத்தை அதன் தேசியத் தலைவர் எம்.எல்.எம்
தௌபீக் நிகழ்த்தியதுடன்
இத்திட்ட அமுலாக்கல்
முறைமை குறித்து
அவ்வமைப்பின் பொது உறவுப் பகுதிப் பொறுப்பாளரும்
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளருமான முஆஸ்
அஹமட் விளக்கமளித்தார்.
இதன் போது
அவர் 350 மாணவர்களுக்கு
தலா 4000 ரூபா
பெறுமதியான பாடசாலை உபகரணப் பொதிகளை வழங்க
உத்தேசித்துள்ளதாகவும் அவற்றில் 210 பொதிகளை
கொழும்பு மாவட்ட
மாணவர்களுக்காகவும் 140 பொதிகளை அரநாயக்க
பிரதேச மாணவர்களுக்காவும்
ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில்
உரை நிகழ்த்திய
விஷேட அதிதிகள்
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுமதி குறித்தும்
வெற்றிகரமான அமுலாக்கல் முறைமை குறித்தும் பாராட்டிப்
பேசியதோடு இந்நிகழ்ச்சித்
திட்டத்தினை ஏற்பாடு செய்த இரு இயக்கங்களுக்கும்
தமது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இம்மாநாட்டின்
விஷேட அம்சமாக
IiWords எழுத்தாளர் இயக்கத்தின் இந்
நிகழ்ச்சித் திட்டத்திற்காக சேகரிக்கப்பட்ட
பணத்தொகையை காசோலை மூலமாக விஷேட அதிதிகள்
முன்னிலையில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர்
இயக்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இம்மாநாடு
ஸ்ரீ லங்கா
இஸ்லாமிய மாணவர்
இயக்கத்தின் பொதுச்செயலாளர் றுடானி ஸாஹிர் அவர்களின்
நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
படங்கள்:-
அனஸ் அப்பாஸ்
+94 776633902
0 comments:
Post a Comment