முடிவுக்கு வந்தது விமான கடத்தல் விவகாரம்...!
118 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு
118 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று
கடத்தப்பட்ட சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு
வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக
'Afriqiyah Airways A320' என்ற பயணிகள் மால்டாவில்
வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில்,
குறித்த கடத்தல்
சம்பவம் தற்போது
முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தை கடத்தியவர்கள் என தெரிவிக்கப்படும்
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன்,
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்
வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
கைது செய்யப்பட்டுள்ள
சந்தேகநபர்கள் மால்டாவில் அகதி தஞ்சக்கோரிக்கை விடுத்திருந்ததாக
தகவல்கள் வெளியாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.