கல்முனை
நகரிலுள்ள பொது நூலகத்தின் அவல நிலை
உடனடிக்
கவனம் செலுத்த்துமாறு கோரிக்கை
கல்முனை
நகரிலுள்ள பொது நூலகத்தின் அவல நிலை
குறித்து வாசகர்கள் கவலை தெரிவிப்பதுடன் இப்பிரதேச மக்களின் அறிவு வளர்ச்சிக்கு
பெரிதும் உதவும் இந்நூலகத்தின் குறைகளைப்
போக்கி அபிவிருத்தி செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் உடனடிக் கவனம் செலுத்தி உதவ
வேண்டும் என கல்விமான்கள் மற்றும் இப்பிரதேச பாடசாலை அதிபர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
முன்னாள் வர்த்தக
வாணிபத்துறை அமைச்சர் ஏ. ஆர். மன்சூரின் முயற்சியின் பலனாக முன்னாள் அமைச்சர்
மர்ஹும் ஏ.சி.எஸ்.ஹமீதினால் 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்ட இப் பொது நூலகம் இன்று வரை
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தியும் இன்றி பல குறைபாடுகளுடன் இயங்கி
வருகின்றது. என வாசகர்களால் குறை தெரிவிக்கப்படுகின்றது
அமைதி இடமாக
இருந்த இப்பொது நூலகப் பிரதேசம் இன்று இரைச்சல் மிகுந்த இடமாக
மாறியிருக்கின்றது.கல்முனை புதிய பஸ் தரிப்பு நிலையம் இந்நூலகத்திற்கு அருகில்
அமைக்கப்பட்டிருக்கிறது ஆட்டோக்களும் இவ்விடத்தில் நிறுத்தப்படுகின்றது.
இப்பொது நூலக
வளவின் முன் பகுதிக்கு எல்லையிட்டு வேலி எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்கள்,ஆட்டோக்கள் என்பன நூலக வலவிற்குள் சென்றுதான்
திருப்பி எடுக்கப்படுகின்றன இதன்போது பாரிய இரைச்சல்களும் ஹார்ண் சப்தங்களும்
எழுப்பப்படுவதால் நிம்மதியாக வாசிக்க முடிவதில்லை எனவும் கவலை
தெரிவிக்கப்படுகின்றது.,கல்முனயில் பொது நூலகம் எங்கு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு இதற்கென
பெயர் பலகை நடப்படவில்லை. வாசகர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர
வண்டிகள் என்பனவற்றை நிறுத்தி வைப்பதற்கு வாகனத் தரிப்பிடம் அமைத்துக்
கொடுக்கப்படவில்லை. வாசகர்களின் அவசரத் தேவைக்கு மல சல கூட வசதியும் இதுவரை இங்கு
ஏற்படுத்தப்படவில்லை. எல்லை போட்டு ஒரு அடக்கமான நிலையில் இல்லாத இந்நூலக
வளவிற்குள் இரவு நேரங்களில் வெளியில் உள்ளவர்கள் சென்று சிறுநீர் கழிப்பதை
வழக்கமாகாகக் கொண்டிருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது .இதனால் நூலக வளவிற்குள் சகிக்க முடியாத துர்நாற்றம்
வீசுகின்றது.
இந்நூலக முன்னேற்ற நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படல்
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.