வசந்தம் தொலைக்காட்சியின் சுயாதீன செய்திப் பார்வை
நிகழ்ச்சியின் நாயகன் நௌஷாட் மொஹிதீன் எங்கே..?
வசந்தம்
தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் எமது பார்வை என்றும்
பின்னர் நல்லாட்சி
ஏற்படுத்தப்பட்டு ஊடக சுதந்திரம் வழங்கப்பட்ட பின்
சுயாதீன செய்திப்
பார்வை என்றும்
காலை 6.30 முதல்
7.15 வரை ஒரு
நேரடி நிகழ்ச்சி
ஒளிபரப்பாகி வருகின்றமை எல்லோரும் அறிந்த விடயம்.
இந்த நிகழ்ச்சியின்
நாயகன் என்று
வர்ணிக்கப்பட வேண்டிய ஒருவர் அந்த நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கிய
சிரேஷ்ட ஊடகவியலாளர்
நௌஷாட் மொஹிதீன்
என்றால் அது
மிகையாகாது. இதற்கு முன் அவர் ரூபவாஹினி
ஐ அலைவரிசையிலும்
இந்த நிகழ்ச்சியை
நடத்தியவர் என்பதை பலரும் அறிவர். தமிழில்
இத்தகைய செய்தி
தொகுப்பு நிகழ்ச்சியின்
மூல கர்த்தாவே
அவர் தான்.
ஏனைய
அலைவரிசைகளில் செய்திப் பத்திரிகைகளை இன்னமும் காலையில்
பலர் வாசித்து
பார்வையாளர்களின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கும் வேளையில்
அதிலிருந்து முற்றாக விலகிச் சென்று செய்தியோடு
சேர்த்து மேலதிக
தகவல்களையும் இணைத்து பார்வையாளர்களுக்கு
பிரயோசனம் மிக்க
பல தகவல்களோடு
முற்றிலும் சுவாரஷ்யமாகவும் சுறுசுறுப்பாகவும்
உணர்வுபூர்வமாகவும் இந்த நிகழ்ச்சியை
தொகுத்து வழங்குவதில்
நௌஷாட் மொஹிடீனுக்கு
நிகர் இப்போதைக்கு
யாரும் இல்லை
என்பதை ஊடகத்
துறை பற்றி
அறிந்த எவரும்
எந்த சந்தேகமும்
இன்றி துணிச்சலாகக்
கூறுவர்.
தனது
கம்பீரக் குரலாலும்,
காத்திரமான கருத்துக்களாலும் நேர்மை தவறாத நடு
நிலை விமர்சனங்களாலும்,
பிரயோசனம் மிக்க
மேலதிக கருத்துக்களாலும,;
அவ்வப்போது சிறுபான்மை சமூகத்தினருக்கான
உரிமைக் குரலாகவும்
ஒலித்து பார்வையாளர்களை
அதிகாலை வேளையில்
45 நிமிங்கள் கட்டிப் போட்டிருந்த அந்த கம்பீரக்
குரலை சில
நாற்களாகக் கேட்க முடியவில்லை.
நௌஷாட்
மொஹிதீன் எங்கே காணோம்
என்று வசந்தம்
தொலக்காட்சியோடு தொடர்பு கொண்டு கேட்ட போது
அவர் விடுமுறையில்
இருப்பதாக கூறினார்கள்.
ஆனால் உள்ளே
பணிபுரியும் சில நண்பர்களோடு தொடர்பு கொண்டு
துருவி விசாரித்த
போது தான் பல
தகவல்கள் வெளிப்படுகின்றன. அவர் விடுமுறையில் செல்லவில்லை.
விடுமுறையில் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக
அவர் இந்த
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பெரும்
பிரபலம் அடைந்தார்.
தமிழ் பேசும்
மக்கள் செறிந்து
வாழும் பகுதிகளில்
வாழும் மக்களுள்
பெரும்பான்மையானவர்களுக்கு காலையில் இந்த
நிகழ்ச்சியைப் பார்க்காவிட்டால், அவரது குரலை கேற்காவிட்டால்
எதுவுமே ஓடாது
என்ற நிலையே
காணப்பட்டது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும்
சில அப்பாவி;
மக்களுக்கு மொழி ரீதியான பிரச்சினைகளையும் நீக்கி சிங்கள மற்றும் ஆங்கில
மொழி பத்திரிகைகளில்
வெளியாகியுள்ள தகவல்களை கூட விரிவாக விவரித்து
வழங்கி வந்தவர்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் விருப்பத்துக்கு
அப்பால் ஒரு
சில காழ்ப்புணர்வு
கொண்ட தனி
நபர்களின் காழ்ப்புணர்வுக்கும்
பொறாமைக்கும் பலியாக்கப்பட்டுள்ளார்.
ஒரு சிலருக்கு உதவுவதற்காகவும்
நௌஷாட் மொஹிதீனுக்கு
உரிய வாரத்தில்
ஐந்து நாள்
என்ற நிலையை
மாற்றி அதில்
குறைப்பு செய்து
வாரத்துக்கு இரண்டு நாள் செய்தால் போதும்
என்ற நிலையை
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தனது சிரேஷ்ட நிலைக்கும்
தன்மானத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட பங்கமாகக் கருதிதான் நௌஷாட்
மொஹிதீன் விலகியுள்ளார்.
தொலைக்காட்சி
நிகழ்ச்சி ஒன்றை
தொகுத்து வழங்க
ஒருவரைத் தெரிவு
செய்கின்றபோது அதற்காக கவனம் செலுத்தப் பட
வேண்டிய விடயங்கள்
ஏராளம் இருக்கின்றன.
ஆனால் இங்கு
அவற்றில் கவனம்
செலுத்தாமல் தனி ஒருவரின் விருப்பத்துக்கு மட்டும்
இடமளிக்கப்பட்டுள்ளது. வசந்தம் தொலைக்காட்சியின்
பல தமிழ்
சகோதரர்களுக்கும் இந்த முடிவில் உடன்பாடில்லையாம் ஆனால் தமது
சொந்த நலன்
கருதி இதுபற்றி
எதுவும் பேசாமல்
அவர்கள் வாய்மூடி
நிற்கின்றனராம்.
நௌஷாட்
மொஹிதீன் பற்றி
அவருடைய சமகால
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கருத்து
தெரிவித்தபோது,
நௌஷாட்
மொஹிதீன் தன்மானச் சிங்கம். தனது
தன்மானத்துக்கு பாதகம் ஏற்படும் இலேசான அறிகுறிகள்
தெரிந்தாலும் கூட அதற்கு மேல் ஒரு
நிமிடம் கூட
அவர் அங்கு இருக்கமாட்டார். எப்பேற்பட்ட நிலையாக
இருந்தாலும் தூக்கி எறிந்து விட்டு வந்துவிடுவார் என்று தனது
நண்பன் குறித்து
பெருமையாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவருடைய ஊடக
வாழ்வில் இதற்கு
முன்னரும் அவர்
இவ்வாறான நிலைமைகளை
கடந்து வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆக
மொத்தத்தில் பழுத்த அனுபவம் மிக்க ஒரு
திறமைசாலி தொழில்
ரீதியாகவும் அனுபவம் மற்றும் அறிவு ரீதியாகவும்
அவரது அருகில்
நிற்க கூட
தகுதியற்ற சிலரின்
தேவைகளுக்காக பழிவாங்கப்பட்டுள்ளார். இது
தமிழ் பேசும்
பல்லாயிரக்கணக்கான மக்களின் விருப்பத்துக்கு
மாறான விடயம்.
தமிழ் பேசும்
மக்களின் உரிமைகளுக்கு
எதிரான விடயம்.
இந்த நல்லாட்சியின்
உருவாக்கத்துக்காக ஒலித்த ஒரு
குரல், பின்னர்
அதே நல்லாட்சிக்கும்
அதன் அமைச்சர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும்
அவ்வப்போது துணிச்சலாக ஒலித்த ஒரு குரல்
தனிப்பட்ட சிலரின்
தேவைகளுக்காகவும் காழ்ப்புணர்வுக்காகவும் நசுக்கப்பட்டுள்ளது.
வசந்தம் தொலைக்காட்சி
ரசிகர்கள் தமது
விருப்புக்கு எதிரான இந்தச் செயலை கண்டிக்க
வேண்டும்.
0 comments:
Post a Comment