ஜெயலலிதா
அண்ணன் மகள் தீபா
அரசியலுக்கு
வருவது தொடர்பாக புத்தாண்டில்
புது முடிவு
''அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை, ஜன., 2ல் அறிவிப்பேன்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களிடம்,
ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
தீபா உறுதி அளித்துள்ளார்.
ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர் சசிகலா; அவரது குடும்பத்தினரை, ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் சேர்க்கவில்லை. சசிகலாவிற்கு எந்த
பதவியும் வழங்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந் ததும், அவரால் விலக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகினர்.
கட்சியை தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வர, தொடர் நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால், சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ளார். இது, ஜெயலலிதா விசுவாசிகளிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.
அதிருப்தியாளர்கள், கட்சிக்கு தலைமையேற்க வரும்படி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு
வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் உட்பட
பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று, ஏராளமான தொண்டர்கள், தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் குவிந்தனர். 'அரசியலுக்கு வர வேண்டும்; அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும்' என, கோஷமிட்டனர்.
அவர்களிடம் பேசிய தீபா, ''அனைவரும் அமைதியாக இருங்கள். ஜன., 2ல், என் முடிவை அறிவிக்கிறேன்; அது நல்ல முடிவாக இருக்கும்,'' என்று தெரிவித்துள்ளார். அதை ஏற்று, தொண்டர்கள் கலைந்து சென்றனர் என
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment