புதிய ஜனாதிபதி
ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலி:
முஸ்லிம்கள் தொடர்பான தகவல் பதிவை அழிக்க முடிவு
- ஜனாதிபதி ஒபாமா புதிய திட்ட ம்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின்
அச்சுறுத்தலால் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்பதிவை அழித்துவிட தற்போதைய ஜனாதிபதி பராக்
ஒபாமா முடிவு செய்துள்ளார்.
கடந்த 2001 செப்டம்பர் 11-ம் திகதி
நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ‘தேசிய வருகை பதிவேடு’ திட்டத்தை அமெரிக்க அரசு அமல் படுத்தியது.
அதன்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈராக், ஈரான், சூடான், சிரியா உள்ளிட்ட 25 நாடுகளில்
இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள் உன்னிப்பாகக் கண் காணிக்கப்பட்டனர். அவர்கள்
தொடர்பாக தனி பதிவேடு பராமரிக்கப்பட்டது.
அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம்கள் குறிப்பிட்ட கால
இடைவெளியில் குடியேற்ற அதிகாரிகளைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்
என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டது.
கடந்த 2002-ல் தொடங்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் 2003 டிசம்பரில் தளர்த்தப்பட்டன. 2011-க்குப் பிறகு முஸ்லிம்களைக் கண்காணிக்கும் ‘தேசிய வருகை பதிவேடு’ திட்டம் நடை முறையில் இருந்து முழுமையாக
நீக்கப்பட்டது.
இந்த திட்டத்தை தீவிரப்படுத்தி மீண்டும் செயல்படுத்த புதிய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முடிவு
செய்துள்ளார். அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்கப்படும், முஸ்லிம்களுக்கு தனி பதிவேடு பராமரிக்கப்படும்
என்று அவர் அண்மையில் தெரிவித்தார்.
இதனால் அமெரிக்காவின் மதச்சார்பின்மை பாதிக்கப்படும் என்று
தற்போது ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். எனவே முஸ்லிம்கள் தொடர்பான பதிவேட்டை முழுமையாக அழித்துவிட
தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி ‘தேசிய வருகை பதிவேடு’ திட்ட தகவல்கள் அனைத்து தளங்களில் இருந்தும் நீக்கப்பட உள்ளது. ஜனவரி 20-ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கும் ட்ரம்பால்
முஸ்லிம்கள் தொடர்பான எவ்வித தகவலையும் திரட்ட முடியாது என்று ஜனாதிபதி ஒபாமாவுக்கு
நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment