சுனாமி பேரழிவின் 'வலி'யை கடத்திய புகைப்படம்
2005-ம் ஆண்டின் 'வேர்ல்டு பிரஸ் போட்டோ'விருதை வென்றது
பல
ஆயிரம் உயிர்களை
பலி கொண்ட
சுனாமி நிகழ்ந்து
12 ஆண்டுகள் கடந்து விட்டது. இதே நாளில்
2004ம் ஆண்டு
இலங்கையின்
வடக்கு,கிழக்கு,தெற்கு கடலோர பகுதியில்
புரட்டிபோட்டது சுனாமி.
2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ்
பண்டிகையின் மறுநாள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக
இருப்பதற்கு பதில், கறுப்பு ஞாயிறாக அமைந்தது.
சுனாமியின்
வலியை மக்களிடம்
கடத்தியவை புகைப்படங்களும்,
வீடியோக்களும் தான். உறவினர் ஒருவர் சுனாமி
தாக்குதலில் இறந்து கிடக்க, அந்த உடலை
பார்த்த கடற்கரை
தரையில் மண்டியிட்டு,
முகம் மண்ணில்
பதிய... கைகளை
விரித்தபடி பெண் ஒருவர் கதறி அழுவதை
எடுக்கப்பட்ட படம் தான், சுனாமி பேரழிவின்
அடையாளமாகவே மாறிப்போனது. பிணத்தின் கை மட்டும்
தெரிய அதன்
அருகே பெண்
அழும் காட்சி
புகைப்படமாக பதியப்பட்டிருந்தது.
சுனாமியின்
பேரழிவுகளை பதிவு செய்ய புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ்
செய்தி நிறுவனத்தின்
இந்திய புகைப்படப்
பத்திரிகையாளரான ஆர்க்கோ தத்தா பதிவு செய்த
புகைப்படம் தான் அது. இழப்புகளின்
ஒட்டுமொத்த வலிகளையும் பொட்டில் அறைந்தது மாதிரி
உணர்த்தும் அந்தப் புகைப்படம் 2005-ம் ஆண்டின் 'வேர்ல்டு
பிரஸ் போட்டோ'விருதை வென்றது.
![]() |
படத்தில் அன்று பதிவானவர் இவர்தான் பெயர் இந்திரா |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.