'ரஜரட்டயின் எழுச்சி'

, 'பொலன்னறுவையை கட்டி எழுப்புவோம்'

வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்



'ரஜரட்டயின் எழுச்சி' ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின், 'பொலன்னறுவையை கட்டி எழுப்புவோம்' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான 04 ஒப்பந்தங்களை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• மன்னம்பிட்டிய – அரலகன்வில – மாதுறுஓயா வீதியினை அபிவிருத்தி செய்தல்
• தெஹியத்தகன்டிய – அரலகன்வில வீதியை புனர்நிர்மானம் செய்தல்
• மின்னேரியா – கல்லோயா வீதியினை அபிவிருத்தி செய்தல்
• எலஹெர – கிரித்தலே வீதியினை அபிவிருத்தி செய்தல்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top