தாயே பிள்ளைகளின் முதல் ஆசான்
அ. இ. ம. காங்கிரஸின் கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஒரு பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் ஆரம்ப ஆசான்கள் அவர்களின் தாய்மாரே. அத்தோடு, ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது என கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.
அல்-ரஃமானியா பாலர் பாடசாலையின் அமைப்பாளர் எம்.எம்.எம்.ஷர்ராஜ் தலைமையில் மாவடிப்பள்ளி அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் ஆரம்ப ஆசான்கள் அவர்களின் தாய்மாயாகும். அத்துடன் ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது. கற்பகாலத்தில் நல்ல சிந்தனைகளையும் நற்பழக்கவழக்கங்களையும் மேற்கொள்வதால் சிசுவின் வளர்ச்சியிலும் அது பங்களிப்புச் செய்கிறது. தொடர்ந்து முன்பள்ளிவரை தாயின் நடத்தைக் கோலங்களையே குழந்தையும் பின்பற்ற எத்தனிக்கிறது. எனவே இக்கால கட்டத்தில் தாய்மார் தம் குழந்தைகளுக்கு உண்மை உரைப்பதற்கும் நன்மை தீமைகளைப் பகுத்தறிவதற்கும் ஆன்மீக விழுமியப் பண்புகளை எடுத்து நடப்பதற்கும் வழிகாட்ட வேண்டும்.
“தொட்டில் பழக்கம் சுடுகாட்டு மட்டும்” எனும் பழமொழிக்கேற்ப குழந்தைகளின் அடிமனதில் நல்ல எண்ணங்களைப் பதிக்க வேண்டும். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது நற்பிரஜைகளாக வருவதில் இந்த இளமைக்கால மனப்பதிவுகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாற்றும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில், மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் வித்தியாலய அதிபர் ஷய்புடீன் மற்றும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment