ஜெயலலிதாவின் அடையாளத்தில் சசிகலா !
ஒவ்வொரு தலைவருக்கும்
சில அடையாளங்கள்
இருக்கும். அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான
உடை, தெளிவான
குரல் உள்ளிட்ட
சில அடையாளங்களாக
மக்கள் மத்தியில்
உள்ளன. இன்று
ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில்
சில மாற்றங்களைக்
காணமுடிகிறது.
டார்க்
கலர்களை நடுத்தரக்
குடும்பத்துப் பெண்கள் நாகரிகம் என விரும்புவதில்லை.
பூபோட்ட சேலைகளே கிராமத்துப்
பெண்களை அதிகம்
கவரும். சாதாரண கலர்கள்,
பார்ப்பவர்களிடம் தனி மரியாதையைக் கூட்டும்.
இதேபோல புது
ஸ்டைல் என
வருவதை உடனே
ஏற்று, அதற்கு
ஏற்றார்ப்போல மாறிக்கொள்ளவும் மாட்டார்கள்.
பாரம்பர்ய வழக்கம்
என்பதும் கூடுதல்
தகுதி. இத்தகைய
வழக்கத்தையே சசிகலாவும் இதுவரை பின்பற்றி வந்தார்.
ஆனால் இன்று
ஜெயலலிதாவைப்போல புடவையும் ஸ்டைலையும் மாற்றிவிட்டார்.
ஜெயலலிதாவின் அடையாளங்கள்:
*நெற்றிப்
பொட்டுக்கு மேல் செந்தூரக் கோடு, ஜெயலலிதாவின் முக
அழகை உயர்த்திக்
காட்டியது.
*பார்டர்
வைத்த
பச்சை நிறச் சேலை, அனைவரும் விரும்பும் நிறம்.
*இடது
கையில் கறுப்புப்
பட்டையில் வாட்ச்
, செயலில் உறுதித்தன்மை
.
*முடிபோட்ட
கூந்தல், அம்மாவின் எளிய அலங்காரம்
இவையெல்லாம் முன்னாள் முதவர் ஜெயலலிதாவின் அடையாளங்களாக
இருந்தவை.
சசிகலாவின் மாற்றங்கள்:
லைட்
கலர் பூ
போட்ட சேலையும்
அதற்கு மேட்சாக
சாதாரண ப்ளவுஸும்,
வட்டப்பொட்டும், ஜடை போட்ட கூந்தலும், வளையல்களுடன்
ஒற்றை மூக்குத்தி,
என இது
நாள்வரை அணிந்து
வந்த சசிகலா, 'அக்காவைப்
போலவே நானும்
மாறிவிட்டேன்' என்பதைச் சொவதைப் போல தன் அடையாளங்களை
மாற்றிவிட்டார்.
*காலர்
வைத்த ப்ளவுஸும்,
ஜெயலலிதா பேசுவதைப்
போலவே வார்த்தைகளைச்
சுருக்கமாகவும் ஜெயலலிதா உச்சரிப்பைப் போலவும் பேசி, சாதாரண மக்களை
மட்டுமல்லாமல், அனைவரையுமே ஆச்சர்யப்படவைத்துவிட்டார்.
0 comments:
Post a Comment