அரச அதிகாரிகளின்மேற்பார்வையின்றி இடம்பெறும்
சாய்ந்தமருது தோணா வேலைத் திட்டம்
மக்கள் ஆத்திரம்
சாய்ந்தமருது தோணா வேலைத் திட்டம் 162 மில்லியன் ரூபா செலவில்
அந்த ஊர் மக்களின் அபிலாஷைகள் எதுவும் கருத்தில் கொள்ளாது இடம்பெற்று வருகின்றது.
தோணாவில் உள்ள குடா பகுதியைச் சுற்றி முண்டு கற்கள் சுவராகத் தற்போது அடுக்கப்படுகின்றன.
ஆஸ்பத்திரி வீதியில் பாலத்திற்கு அருகாமையில் முண்டுக் கற்களால்
அடுக்கப்பட்டு எழுப்பபடும் சுவர் ஒரு நேராக கொண்டு செல்லாமல் ஒரு குடா எடுத்து பாதை
அருகாமையில் உள்ள நிலத்தை எடுத்துச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்கரையோரத்தில் பாலத்தை அண்டியதாக அடுக்கப்படும் முண்டுக்
கற்கள் உடைத்தால் மாவாகப் மாறும் உறுதியற்ற கற்கள் அடுக்கப்படுவதாகாவும் மக்கள் ஆத்திரம் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது தோணா வேலைத் திட்டம் அரச அதிகாரிகள் எவரினதும் சரியான மேற்பார்வையின்றி இடம்பெறுவதாவும் மக்கள் கூறுகின்றனர்.
பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஹக்கீம் அவர்களே!
பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களே!!
மக்கள் விரும்பியுள்ள தோணா அபிவிருத்தியை உறுதிப்படுத்துங்கள்.பொது மக்களின் நிதி சரியான விதத்தில் பயன்படுத்த உத்தரவாதம் செய்யுங்கள் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment