வங்காளதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்
Manjurul Islam சுட்டுக்கொலை
வங்காள தேசத்தை சேர்ந்த எம்.பி. மஞ்சுருல் இஸ்லாம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
வங்காள தேசத்தை சேர்ந்த எம்.பி. மஞ்சுருல் இஸ்லாம். இவர் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். நேற்று இவர் காயபந்தா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு மர்ம நபர்கள் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மஞ்சுருல் இஸ்லாமை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எனவே அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதையடுத்து அவர்கள் மங்சுருல் இஸ்லாம் எம்.பி.யை 5 தடவை துப்பாக்கியால் சுட்டனர். எனவே குண்டுகள் பாய்ந்த அவர் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்றனர்.
தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அங்கு பெருமளவில் திரண்டனர். எம்.பி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலைச் சிறுவன் ஒருவனை சுட்டுக் கொன்றதாக கடந்த 2015-ம் ஆண்டு மஞ்சுருல் இஸ்லாம் எம்.பி. கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment