திருடர்களால் குளியலறைக்குள் அடைக்கப்பட்ட

6 பேர் மூச்சுத்திணறி பலி

Six Indonesians found dead after being locked in bathroom during robbery


இந்தோனேசியா நாட்டில் திருடர்களால் மிகச்சிறிய குளியலறைக்குள் அடைக்கப்பட்ட 11 பேரில் 6 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 4 திருடர்கள், வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 11 பேரை சுமார் 20 சதுரடி கொண்ட குளியலறைக்குள் தள்ளி, அடைத்துவிட்டு கதவை வெளியே பூட்டி விட்டனர்.
வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் குளியலறைக்குள் அடைபட்டு கிடந்தவர்களில் சிலர், மிகச்சிறிய இடத்தால் ஏற்பட்ட மூச்சுதிணறலில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
இன்றுகாலை குளியலறை கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு அவர்களை காப்பாற்றவந்த அக்கம்பக்கத்து வீட்டினர், உள்ளே இருந்தவர்களில் ஒன்பது வயது குழந்தை உட்பட ஆறுபேர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், மயங்கிய நிலையில் சோர்வுடன் காணப்பட்ட ஐந்துபேரை மீட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top