உலகம் 2016:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப்

பேச்சுக்களில் 10 தெறிப்புகள்


2016 ஆம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டிருக்கிறார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்.
ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர், ஹிலாரியை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுக்கிறார் என்று உறுதியானதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத சர்ச்சைகளுடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தப்பட்டு, தேர்தலும் முடிந்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

2016-ல் டர்ம்ப் உதிர்த்த சர்ச்சை பேச்சுகளின் தொகுப்பு:

ஹிலாரி ஒரு தீய சக்தி

ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் இதுவரை எந்த ஜனாதிபதி வேட்பாளரும் பயன்படுத்தாத வார்த்தைகளைக் கொண்டு தனது சக போட்டியாளரான ஹிலாரியை விமர்சித்தார். ஹிலாரியை தீய சக்தி என்றும், ஹிலாரி செய்த ஊழல் தவறுக்கு அவரை சிறையில் தள்ளுவேன் என்றும் அவர் கூறினார்.

மதவெறுப்பு

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சை மிகுந்த கருத்துகளை ட்ரம்ப் தெரிவித்து வந்தார். இதனை தனது தேர்தல் உத்தியாகவே ட்ரம்ப் கையாண்டார்.

அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு தனிப் பதிவேடு, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் குடியேறத் தடை விதிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்துவேன் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

மெக்சிகோ எல்லையில் சுவர்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மெக்சிகோவில் சுவர் எழுப்பப்படும். மேலும் மெக்சிகோவிலிருந்து வருபவர்களை 'போதைப் பொருட்கள் கடத்துவர்கள்' ; 'பாலியல் பலாத்காரர்கள்' என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு

கடந்த 2005-ம் ஆண்டில் பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோவைவாஷிங்டன் போஸ்ட்நாளிதழ் வெளியிட்டது. அந்த வீடியோவில், "அழகான பெண்களிடம் நான் அத்துமீறி நடந்து கொள்வேன். பிரபல தொழிலதிபராக இருப்பதால் எனது அத்துமீறலை பெண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்" என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அவரது தேர்தல் பிரச்சாரங்களில் அவருக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஒபாமா அமெரிக்க குடிமகன் அல்ல

'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க குடிமகன்தானா?' - என்ற சர்ச்சையை மக்களிடையே ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் தன் மீது விழச் செய்தார் ட்ரம்ப்.

ரஷ்யாவுடன் நட்புக் கரம்

அமெரிக்கா தனது ஆஸ்தான எதிரியாகக் கருதி வரும் ரஷ்யாவுடன் நட்பு கொள்ள எண்ணினார் ட்ரம்ப்.

ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக வெளிப்படையாகவே தனது தேர்தல் பிரச்சாரங்களில் ட்ரம்ப் அறிவித்தது அமெரிக்க தலைவர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சீனாவுடன் மோதல் போக்கு

அமெரிக்கர்களின் பணிகளை சீனா கொண்டு சென்று விடுகிறது என்று கடுமையாக சீன வெறுப்பை காட்டி வந்தார் ட்ரம்ப். மேலும் சீனா வர்த்தக மோசடிகளில் ஈடுபடுகிறது என்றும் பகிரங்கமாக விமர்சித்தார்.

புவி வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் என்பது சாதாரணமாக பருவநிலையில் ஏற்படும் மாற்றம் மட்டுமே, எனவே ஆர்டிக் பகுதி ஆராய்ச்சிக்கு செலவிடுவதை விட, விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் இந்த முடிவை மிகப் பெரிய தவறு என்று விஞ்ஞானிகள் விமர்சித்தனர்.

அணு ஆயுத கொள்கையில் போட்டா போட்டி

உலக நாடுகளில் பெரும்பாலானவை அணு ஆயுத கொள்கையைக் கைவிட்டு மாற்றத்தை நோக்கி நகரும் வேளையில், ரஷ்யா அணுஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என புதின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் அதே நாளில் அமெரிக்காவின் அணுஆயுதக் கொள்கையை மாற்றி அமைப்பேன். அணுஆயுத பலத்தை பன்மடங்கு அதிகரிப்பேன் என்று தெரிவித்தது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

.நா மீது விமர்சனம்


இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த ட்ரம்ப், அதிகபட்ச அதிகாரத்தைக் கொண்டிருந்தும் மக்கள் கூடும் பொழுதுபோக்கு கிளப் போல ஐநா செயல்படுகிறது. மேலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாக செயல்படாமல் பிரச்சனைகள் உருவாகும் இடமாக ஐநா விளங்குகிறது என்று கூறியது சமிபத்தில் ஏற்படுத்திய சர்ச்சை பேச்சு ஆகும்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top