கருணாநிதி முழு ஓய்வில் இருக்க வேண்டும்
பார்வையாளர்களை சந்திக்க, அனுமதிக்கக் கூடாது
டாக்டர்கள் அறிவுரை
தி.மு.க., தலைவர் கருணாநிதி முழு ஓய்வில் இருக்க வேண்டும். பார்வையாளர்களை சந்திக்க, அனுமதிக்கக் கூடாது என டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை, காவேரி மருத்துவமனையில், எட்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று மாலை, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
கடந்த, 15ல், கருணாநிதி திடீரென சுகவீனம் அடைந்தார். உடனடியாக, அவர் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார்;
அவர் எளிதாக சுவாசிக்க, தொண்டை குழியில் துளையிட்டு, 'டிராக்கி யோஸ்டமி' என்ற சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவருக்கு, சளி அகற்றும் சிகிச்சையும், நரம்பியல் தொடர்பான சிகிச்சையும் செய்யப்பட்டது.தற்போது, அவர் குணமடைந்துள்ளதால், நேற்று மாலை,
4:45 மணியளவில், 'டிஸ்சார்ஜ்' செய்யப் பட்டார்.
காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர், டாக்டர் அரவிந்தன் அறிக்கை:
தொண்டை, நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக, கருணாநிதி பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப் பட்டுள்ளன.
டாக்டர்கள் அறிவுரைப்படி, கருணாநிதி முழு ஓய்வில் இருக்க வேண்டும். பார்வையாளர்களை சந்திக்க, அனுமதிக்கக் கூடாது. அவர், எளிதாக சுவாசிப்பதற்காக, 'டிராக்கியோஸ்டமி' டியூப், அடுத்த பல வாரங்களுக்கு, அவரது உடலில் இருக்கும். காவேரி மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய குழுவினர், அவரை தொடர்ந்து கண்காணிப்பர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment