இலஞ்சம் தர
மறுத்ததால் பிறந்த குழந்தையை
ஹீட்டரில்
காட்டி முகத்தை பொசுக்கிய நர்ஸ்
இலஞ்சம் தர மறுத்ததால்
பிறந்த குழந்தையை ஹீட்டர் அருகே காட்டி, துணை நர்ஸ் கொடுமைப்படுத்திய சம்பவம் ஜெய்ப்பூர்
பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான்
மாநிலம் ஜெய்ப்பூர்
பகுதியை சேர்ந்த
ஆரம்ப சுகாதார
நிலையத்தில் மாயா என்ற பெண் கடந்த
திங்கட்கிழமை அழகான பெண்குழந்தையை பிரசவித்தார். பிரசவம்
முடிந்த சிறிது
நேரத்தில் அங்கு
துணை நர்ஸாக வேலை செய்த நீது
குர்ஜார் 300 ரூபாயை இலஞ்சமாக மாயா குடும்பத்தாரிடம்
கேட்டுள்ளார்.
ஆனால்
மாயா குடும்பத்தினர் இலஞ்சம் கொடுக்க
முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நீது குழந்தையை
எடுத்து சென்று
ஹீட்டர் அருகே
தூக்கிப்பிடித்தார். நீதுவின் இந்த
செயலால் அச்சமடைந்த
குழந்தையின் பாட்டி நீதுவிற்கு 300 ரூபாயும், அங்கிருந்த
மற்றொரு நர்ஸ்க்கு
200 ரூபாயும் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
இதனைத்
தொடர்ந்து அந்த
குழந்தையை மாயா
குடும்பத்தாரிடம் கொடுத்து விட்டு நீது சென்றுவிட்டார்.
ஆனால் ஹீட்டர்
அருகே தூக்கிப்
பிடித்ததால் குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து
அந்த குழந்தை
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின்
தந்தை லால்சந்த்
நர்ஸ் நீதுவுக்கு
எதிராக பொலிஸ் நிலையத்தில்
புகார் கொடுத்ததைத்
தொடர்ந்து இந்த
சம்பவம் தற்போது
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீதுவுக்கு எதிராக பல்வேறு
பிரிவுகளின் கீழ் பொலிஸ்லையத்தில் எப்ஐஆர் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கேள்விப்பட்ட ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் காளிசரண்
சரப், இதுகுறித்து
விரிவாக விசாரணை
நடத்தி டிசம்பர்
26-க்குள் அறிக்கை
தாக்கல் செய்யும்படி
உத்தரவிட்டுள்ளார்.
நீது
உட்பட துணை
சுகாதார நிலையத்தில்
இருந்த மூன்று
நர்ஸ்களும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.