பாகிஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் மீது
6-ம் வகுப்பு மாணவன் தொடர்ந்துள்ள வழக்கு!
பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னாஹ் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக தயாரித்திருந்த தனது சொற்பொழிவு உரையை திருடியதாக ஜனாதிபதி அலுவலகம் மீது 6-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வழக்கு தொடர்ந்துள்ளான்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள சிறுவர்களுக்கான மாதிரி கல்லூரியில் 6-ம் வகுப்பு படித்து வரும் ஹைடர் (வயது 11) என்ற மாணவன், தனது தந்தையின் மூலம் ஜனாதிபதி மம்னூன் உசைன் அலுவலகத்திற்கு எதிராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இளம் சொற்பொழிவாளராக திகழும் அந்த மாணவன், தனது வழக்கு மனுவில், பாகிஸ்தான் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாஹ் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக தான் தயாரித்திருந்த சொற்பொழிவின் அம்சங்களை தனது சம்மதம் இல்லாமல் வேறு ஒருவரிடம் கொடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
‘ஜின்னாஹ்வின் 141-வது பிறந்தநாள் தெடார்பான நிகழ்ச்சியில் ஒளிபரப்புவதற்காக சொற்பொழிவு உரையை தயார் செய்யும்படி ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொண்டது. அதற்காக எனது இரண்டு தேர்வுகளைக்கூட தியாகம் செய்துவிட்டு பலமுறை ஒத்திகை பார்த்து உரையை தயாரித்து அனுப்பினேன். ஜனாதிபதி அலுவலகமும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஆனால், அவர்கள் கூறியபடி டிசம்பர் 22-ம் திகதி அதனை பதிவு செய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றபோது, அந்த உரையை எனது சம்மதம் இல்லாமல் வேறு ஒரு பாடசாலையைச் சேர்ந்த மாணவியிடம் கொடுத்து வாசிக்க செய்து பதிவு செய்துவிட்டார்கள்.’ என ஹைடர் கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது தொடர்பான முடிவினை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
0 comments:
Post a Comment