மருதமுனை
மனாரியன்ஸ் 95 அமைப்பினரால்
ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த வருடாந்த இரத்த தான நிகழ்வு
மருதமுனை மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
வருடாந்த இரத்த தான நிகழ்வு நேற்று (24.12.2016 சனிக்கிழமை) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை கமு/அல்-மானார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப்
பிரிவினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 3 பெண்கள் அடங்கலாக 79 பேர் இரத்த தானம் செய்து தமது பங்களிப்பினை
வழங்கிவைத்தனர்.
கடந்த வருடமும் டிசம்பர் மாதம் மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் இது போன்றதொரு இரத்த தான முகாம்
வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.