விவாகரத்து கோரி ரஜினி மகள்
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

நடிகர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவாகரத்து கோரி குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.

இந்நிலையில், செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் பிரிந்து வாழ்கிறார்கள். முதலில் ஊடகங்களில் இதுகுறித்து வெளியான தகவலை ட்விட்டரில் உறுதி செய்தார் செளந்தர்யா. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

என் திருமணம் தொடர்பான செய்திகள் உண்மைதான். கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்துவாழ்கிறோம். விவாகரத்து குறித்து பேசிவருகிறோம் என்று கூறினார்


இதையடுத்து தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் செளந்தர்யா மனுத்தாக்கல் செய்துள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top