ஜனாதிபதி
தேர்தலில் முறைகேடு
72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற
வேண்டும்:
ரஷ்ய
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஒபாமா உத்தரவு
ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு
ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 8–ந் திகதி நடந்து
முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை
பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி
வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’
என்னும் தேர்தல் சபை
வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு
ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் (சட்டவிரோதமாக மோசடி செய்து
நுழைகிறவர்கள்) நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில்
ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.
தற்போது அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இதே குற்றச்சாட்டை கூறி இருந்தார். டொனால்டு
டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாகவும்,
இதற்கான ஆதாரம் தங்களிடம்
உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி
தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய
தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேர அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களுடன்
குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment