அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா
இன்று பொறுப்பு ஏற்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக
சசிகலா இன்று
(சனிக்கிழமை) பொறுப்பு ஏற்கிறார். இதையொட்டி நேற்று
மாலை ஜெயலலிதா
உட்பட தலைவர்கள் சமாதியில்
அவர் அஞ்சலி
செலுத்தினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும்,
தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த
ஜெயலலிதா கடந்த
5 ஆம் திகதி காலமானார். அவரின்
மறைவுக்கு பிறகு
முதல்முறையாக அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று
முன்தினம் கூடியது.
இதில் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,
மாநில நிர்வாகிகள்,
மாவட்ட செயலாளர்கள்,
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம்
பேர் கலந்துகொண்டனர்.
பொதுக்குழுவில்
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச் செயலாளராக
நியமனம் செய்வதற்கான
தீர்மானம் உட்பட 14 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தின் நகலை
முதல்-அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்
மற்றும் அமைச்சர்கள்
போயஸ் கார்டன்
சென்று சசிகலாவிடம்
வழங்கினர்.
இதனை
பெற்றுக்கொண்ட சசிகலா தீர்மானத்தை ஜெயலலிதா படத்தின்
முன் வைத்து
வணங்கினார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக
பொறுப்பு ஏற்க
சம்மதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக
சசிகலா இன்று
(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள
கட்சி அலுவலகத்தில்
பதவி ஏற்கிறார்.
எம்.ஜி.ஆரின்
மறைவுக்கு பிறகு
பொதுச் செயலாளரான
ஜெயலலிதா தொடர்ந்து
27 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். அவரது
மறைவுக்கு பிறகு
அவரது தோழி
சசிகலா அந்த
பொறுப்பை ஏற்கிறார்.
இதுவரை
சசிகலாவின் குரல் போயஸ் கார்டனை தாண்டி
கேட்டதில்லை. தற்போது முதல் முறையாக அவரது
குரல் கட்சியினர்
மத்தியில் ஒலிக்க
உள்ளது. கட்சி
அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும்
அவர் தொண்டர்கள்
மத்தியில் சில
நிமிடங்கள் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பு
ஏற்க இருப்பதையொட்டி
தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துவதற்காக மாலை
5 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார்.
அவருக்கு போயஸ்
கார்டன் முதல்
மெரினா கடற்கரை
வரை தென்சென்னை
மாவட்ட அ.தி.மு.க. சார்பில்
உற்சாக வரவேற்பு
கொடுக்கப்பட்டது. 5.20 மணிக்கு அவர்
ஜெயலலிதா சமாதிக்கு
வந்தார்.
ஜெயலலிதா
சமாதியில் மலர்
வளையம் வைத்தும்,
மலர் தூவியும்
கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். சில நிமிடங்கள்
ஜெயலலிதா சமாதியை
கண்ணீர் மல்க
பார்த்த அவர்,
சமாதி முன்பு
5 முறை மண்டியிட்டு
அழுதார். பொதுக்குழு
தீர்மானத்தை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வலம்வந்தார்.
பின்னர்
அவர் எம்.ஜி.ஆர்.,
அண்ணா சமாதியிலும்
மலர் வளையம்
வைத்து அஞ்சலி
செலுத்தினார். ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா
இதுவரையில் எந்த ஒரு தனி நிகழ்ச்சியிலும்
கலந்துகொண்டதில்லை. தற்போது முதல்
முறையாக இந்த
நிகழ்வில் அவர்
கலந்து கொண்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா
பொதுச்செயலாளராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி குறித்து
கட்சி அலுவலகத்தில்
நேற்று முன்தினம்
இரவு முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம்
கட்சி நிர்வாகிகளுடன்
ஆலோசனை மேற்கொண்டார்.
மறைந்த
முதல்-அமைச்சர்
ஜெயலலிதா கட்சி
நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் கலந்துகொள்ள வரும்போது
அவரை வரவேற்கும்
விதமாக பாடல்
இசைக்கப்படும். அதேபோல இப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா
தேர்வு செய்யப்பட்டதை
தொடர்ந்து அவருக்காகவும்
கட்சி நிர்வாகிகள்
புதிய பாடலை
உருவாக்கியுள்ளனர். இந்த பாடல்
நேற்று முன்தினம்
நடந்த பொதுக்குழுவில்
ஒலிபரப்பப்பட்டது.
0 comments:
Post a Comment