அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று கடும் மோதல்
சசிகலா புஷ்பா வக்கீல்களுக்கு அடி, உதை
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர்.
இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
சசிகலாவை பொதுச்செயலாளராக தெரிவு செய்யக்கூடாது எனக்கோரி, எம்.பி., சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு, சசிகலா புஷ்பாவும் போட்டியிட உள்ளார் எனக்கூறப்படுகிறது.
இதற்காக, விண்ணப்பம் தாக்கல் செய்ய, அவர் இன்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளார் என தகவல் பரவியது. இதையடுத்து, இணை ஆணையர் மனோகரன் தலைமையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். கட்சி தொண்டர்களும் ஏராளமான அளவில் குவிந்து இருந்தனர்.
இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதில் மன்னார்குடி கோஷ்டி தீவிரமாக இருக்கிறது.ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கும் சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று பிற்பகல் தகவல் பரவியது.
இதையடுத்து வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.மேலும் குண்டு குண்டாக பலரை கேட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தனர்.அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் கும்பல் அவரை சூழந்து கொண்டு அடித்து உதைத்தது.
சரமாரியாக விழுந்த அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.ஆனாலும் விடாத அந்தக் கும்பல் இருவரையும் பிடித்து இழுத்து அடித்தபடியே ஓடியது. பொலிஸார் தலையிட்டு காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.