டிரம்ப் மகளுடன் வாக்குவாதம் செய்தவர்
விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்
அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதியும்,
பிரபல கோடீஸ்வரருமான டொனால்ட் டிரம்ப்பின் மகளான இவானா டிரம்புடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்ட வக்கீல் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப்பின் மகளான இவானா
மேரி டிரம்ப்(35), அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகியாக இருந்தவர். தற்போது, தொழிலதிபராக
மாறியுள்ள இவர், விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன்
ஹவாய் தீவுகளுக்கு செல்ல திட்டமிட்டார்.
நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் புறப்பட தயாராக காத்திருந்த விமானத்தில் இவானாவும் அவரது குடும்பத்தாரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அப்போது உள்ளே வந்த மற்றொரு பயணி, இவானாவிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உன்னுடைய தந்தை நாட்டை அழித்து விடப் போகிறார் என்று அவரிடம் நேருக்குநேராக கூறிய அந்நபர், இவளை எல்லாம் ஏன் பொது விமானத்தில் ஏற்றுகிறீர்கள்?, இவள் தனிவிமானத்தில் போகலாமே! என்றும் விமானப் பணிப்பெண்களிடம் வம்புக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, சகப்பயணிகளுக்கு அவர் இடையூறாக மாறிவிடலாம் என்று கருதிய பணியாளர்கள் விமானத்தில் இருந்து அவரை கீழே இறக்கி விட்டனர். கீழே இறக்கி விடப்பட்டவர் புரூக்ளின் நகரில் வழக்கறிஞராக தொழில் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment