மாயமான டியு-154 விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

9 பத்திரிகையாளர்கள், 84 பயணிகள்
8 பணியாளர்கள் உட்பட 92 பேர்உயிரிழப்பு


புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கப்பதற்காக சென்ற புகழ்பெற்ற அலெக்சாந்த்ரோவ் ராணுவ இசைக்குழுவினர், 9 பத்திரிகையாளர்கள் உட்பட 84 பயணிகளும் மற்றும் 8 பணியாளர்கள் 92 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து 92 பேருடன் சிரியாவிற்கு புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் மாயமானது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாயமான டியு-154 விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சுற்றுலா நகரான சோச்சியிலிருந்து சிரியாவில் உள்ள லடாகியா என்ற ரஷ்ய முகாமுக்கு மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5. 20க்கு புறப்பட்ட டியு-154 ரக ரஷ்ய ராணுவ விமானம், புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது 5.40 மணியளவில் விமானத்தின் தொடர்பு ராடர் கருவியில் இருந்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அவசரகால சேவைகள் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சோச்சி நகரின் கடற்கரையிலிருந்து கடலில் 1.5 கிமீ தூரத்தில் 50-70 மீட்டர் ஆழத்தில் டியு-154 விமானப் பாகங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கப்பதற்காக சென்ற புகழ்பெற்ற அலெக்சாந்த்ரோவ் ராணுவ இசைக்குழுவினர், 9 பத்திரிகையாளர்கள் உட்பட 84 பயணிகளும் மற்றும் 8 பணியாளர்கள் 92 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 92 பேர் உயிரிழந்துள்ளது ரஷ்யாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

விமானம் விபத்துக்குள்ளான தகவல் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கிய பகுதியாக கருதப்படும் பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top