கை இல்லாமல் பிறந்தவருக்கு
இறந்தவரின் கையைப் பொருத்தி சாதனை
கை
இல்லாமல் பிறந்த
நபருக்கு, இறந்த
நபரின் கையைப்
பொருத்தி போலந்து
நாட்டு மருத்துவர்கள்
சாதனை படைத்துள்ளனர்.
இதுபோன்ற
அறுவைச் சிகிச்சை
நடைபெறுவது உலகில் இதுவே முதல் முறையாகும்.
போலந்தின் விராத்சாஃப்
மருத்துவ பல்கலைக்கழக
மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
அறுவை
சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவின் தலைவர்
ஆடம் டோமினோவிச்
இது தொடர்பாகக்
கூறியுள்ளதாவது,
32 வயது
வரை மணிக்கட்டுக்கு
கீழ் கை
இல்லாமல் வாழ்ந்த
வந்த ஒருவருக்கு,
இறந்த நபரின்
கை, அறுவைச்
சிகிச்சை மூலம்
பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை
கடந்த டிசம்பர்
15-ஆம் திகதி
13 மணி நேரம்
நடைபெற்றது. இப்போது அந்த நபர் தனது
விரல்களை அசைக்க
முடிகிறது. அவர் விரைவில் தனது கையை
முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்.
இதற்கு
முன்பு கனடா,
இந்தோனேஷியா போன்ற நாடுகளில் ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகளுக்கு,
பிறந்தவுடன் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது
என்று தெரிவித்துள்ளார்.
கை,
கால் போன்ற
உறுப்புகள் முழுமையாக இல்லாமல் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு
இந்த அறுவைச்
சிகிச்சை மூலம்
புதிய வாழ்வு
கிடைக்க வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment