சிரிய
போர் சூழலை ட்விட்டரில் பதிவிட்ட சிறுமி
துருக்கி
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு
அலெப்போவில், நிலவிய போர்
சூழலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வந்த சிரிய சிறுமி பானா அலபெத்
துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்டோகனை சந்தித்தார்.
இது தொடர்பாக துருக்கி அரசின் செய்தி நிறுவனமான அனாடோலு
வெளியிட்ட செய்திக் குறிப்பில், "துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சிரிய சிறுமி பானா அலபெத்தை ஜனாதிபதி
மாளிகையில் வரவேற்றார்" என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துருக்கி அரசு வெளியிட்ட புகைப்படத்தில்,
துருக்கி ஜனாதிபதி
எர்டோகன் சிரிய சிறுமி பானா அலபெத்தை கட்டி தழுவியபடி இருக்க, அருகில் பானாவின் சகோதரர் என்று கூறப்படும்
சிறுவனும் உடனிருப்பார்.
மேலும் பானாவின் குடும்பத்துடன் துருக்கி ஜனாதிபதி எர்டோகன்
அமர்திருப்பது போன்ற மற்றுமொரு புகைப்படம் எர்டோகனின் ட்விட்டர் பக்கத்தில்
பதிவிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களை பானா அலபெட், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு
"துருக்கி ஜனாதிபதி எர்டோகனை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என்று
குறிப்பிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் பகுதியிலிருந்து திங்கட்கிழமை பானா
அலெபெட் வெளியேற்றப்பட்டதும், அவரையும்அவரது குடும்பத்தாரையும் துருக்கிக்கு அழைத்து வருமாறு துருக்கி அரசு
சார்பில் அதிகாரிகள் அனுப்பபட்டதாக கூறப்படுகிறது.
@AlabedBana என்ற ட்விட்டர் பக்கத்தில்தான் பானா அல்பெட்டின்
போர் குறித்த உணர்வுகளை பானாவின் தாயார் பாத்திமா பதிவேற்றி வந்தார். கடந்த
செப்டம்பர் மாதம் முதல் இந்தப் பக்கத்தில் சிரிய போர் சம்பந்தமான வீடியோ பதிவுகள்
பதிவேற்றப்பட்டுள்ளன.
போரினால் சீரழிந்துள்ள அலெப்போ நகரிலிருந்து ஒவ்வொரு
நாளையும் குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையே பானா எப்படி கடக்கிறாள், போரில் தங்களது உறவுகளை இழந்த குழந்தைகளின்
உணர்வுகள் என மனதை கலங்கச் செய்யும் வீடியோக்கள் பானாவின் ட்விட்டர் பக்கத்தில்
உள்ளன. பானா அலபெட் ட்விட்டர் பக்கத்தை 330,000 பேர் பின் தொடர்கின்றனர்.
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சிரியாவில் நடந்த உள் நாட்டு
போருக்கு 3 லட்சத்துக்கு
அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
0 comments:
Post a Comment