வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 6 இலட்சத்து 37 ஆயிரத்து 394
மாணவர்களின் கல்வி போதனைக்கு 40 ஆயிரத்து 194 ஆசிரியர்கள்
கல்வி அமைச்சின் புள்ளி விபரம் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 6 இலட்சத்து 37 ஆயிரத்து 394 மாணவர்களின் கல்வி போதனைக்கு 40 ஆயிரத்து 194 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 2077 அரச பாடசாலைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விபர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 1106 அரச பாடசாலைகளும் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 971 அரச பாடசாலைகளும் இருப்பதாகவும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி பாடசாலைகளாக 791 பாடசாலைகளும் சிங்கள மொழிப் பாடசாலைகளாக 263 பாடசாலைகளும் தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடசாலைகளாக 42 பாடசாலைகளும் சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடசாலைகளாக 7 பாடசாலைகளும் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளாக 3 பாடசாலைகளும் உள்ளன.
இது போன்று வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி பாடசாலைகளாக 880 பாடசாலைகளும் சிங்கள மொழிப் பாடசாலைகளாக 25 பாடசாலைகளும் தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடசாலைகளாக 65 பாடசாலைகளும் சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடசாலையாக 1 பாடசாலையும் உள்ளன.
நாடுபூராகவும் மொத்தமாக 10162 அரச பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 9809 பாடசாலைகள் மாகாணப் பாடசாலைகளாகவும் 353 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகவும் காணப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 6 இலட்சத்து 37 ஆயிரத்து 394 மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் வடக்கு மாகாணத்தில் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 314 மாணவர்களும் கிழக்கு மாகாணத்தில் 3 இலட்சத்து 94 ஆயிரத்து 80 மாணவர்களும் அடங்குவர்.
இம்மாணவர்களில்
5 இலட்சத்து 45 ஆயிரத்து 210 பேர் தமிழ் மொழி மூலமும் 84 ஆயிரத்து 986 பேர் சிங்கள மொழி மூலமும் 7 ஆயிரத்து 198 பேர் ஆங்கில மொழி மூலமும் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் மொத்தமாக 4,143,330 மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள்.
வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 40 ஆயிரத்து 194 ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கல்வி போதனையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7943 ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8037 ஆசிரியர்களும் மன்னார் மாவட்டத்தில் 2044 ஆசிரியர்களும் வவுனியா மாவட்டத்தில் 1942 ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2681 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1855 ஆசிரியர்களும் அம்பாறை மாவட்டத்தில் 6750 ஆசிரியர்களும் திருக்கோணமலை மாவட்டத்தில் 8942 ஆசிரியர்களும் இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் அரச பாடசாலைகளில் மொத்தமாக 232,555 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில்
99,724 பேர் பட்டதாரி ஆசிரியர்களாவர்.
0 comments:
Post a Comment