தேசிய
ரீதியில் மின்னொளியில்
விளையாடக்கூடிய வசதியுள்ள பல விளையாட்டு மைதானங்கள்
இருக்கின்ற போதிலும் கல்முனையில் அவ்வாறான வசதியுள்ள
மைதானங்கள் இல்லாதது மிகுந்த குறையாகும். இதனை
நிவர்த்திக்கும் பொருட்டு இன்னும் ஒரு வருடத்துக்குள்
கல்முனையில் பொருத்தமான ஒரு விளையாட்டு மைதானத்துக்கு
மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்து தரப்படும்
என மு.கா தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வாக்குறுதி ஒன்றை
வழங்கினார்.
சாய்ந்தமருது
டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகத்தின்
ஐந்தாவது ஆண்டு
நிறைவை முன்னிட்டு
குறித்த விளையாட்டுக்கழகத்தின்
தலைவரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தவிசாளருமான ஏ.எல்.ஏ.மஜீத்
தலைமையில் “லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிண்ணம்
2017” கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி 72 விளையாட்டுக்கழகங்கள் தொடராக 6 நாட்கள் 5 ஓவர்களைக் கொண்ட
7 வீரர்கள் பங்குகொண்ட போட்டியின் இறுதி நாளான
2017-07-09 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில்
பிரதம அதிதியாக
கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இந்த வாக்குறுதியை
வழங்கியுள்ளார்.
குறித்த
வசதி, கிரிக்கட்
விளையாடுவதற்கு வசதியான கல்முனையில் உள்ள ஒரு
மைதானத்துக்குச் செய்து தருவதாகவும் அதேவேளை இந்தவருடம்
கல்முனை கடற்கரை
பள்ளியில் இருந்து
சாய்ந்தமருது பூங்கா வரையான, கடற்கரை பிரதேசத்தில்
பாரிய அபிவிருத்தித்
திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அந்த
அபிவிருத்தித் திட்டத்துக்குள் சாய்ந்தமருது
பௌஸி ஐக்கிய
விளையாட்டு மைதானத்தையும் புனரமைத்துத்
தருவதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே
செய்யப்பட்டு அம்பாறை கச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment