பொலநறுவை, பழுகஸ்தமன ஜனாதிபதி மாதிரி ஆரம்ப பாடசாலை மாணவர்களிடம் ஒப்படைப்பு பொலநறுவை, பழுகஸ்தமன ஜனாதிபதி மாதிரி ஆரம்ப பாடசாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் நேற்று 10 ஆம் திகதி முற்பகல் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நினைவு பலகையை திரைநீக்கம் செய்து பாடசாலையை மாணவர்களுக்க உரித்தளித்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்ப விஜயத்திலும் ஈடுபட்டார். பாடசாலையின் இணையத்தளம் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2017 மாகாண ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவி விஸ்மினி மனுத்தராவுக்கான சான்றிதழை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கா, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரிதிநிதிகளும் அதிபர் பிரியங்க சில்வா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்த கொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top