முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த 04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கமைய இன்று 11 ஆம் திகதி காலை தனது கடமைகளை திருகோணமலை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், உள்ளிட்டவர்களுடன் ஆளுனரின் செயலாளர், திணைக்கள தலைவர்கள், செயலாளர் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top