கிழக்கு மாகாண ஆளுநராக கட்டாருக்கான தூதுவராகப் பணியாற்றும் ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ?
கிழக்கு மாகாண ஆளுநராக வர்த்தகரும், கட்டாருக்கான தூதுவராகப் பணியாற்றுபவருமான ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ,ஜனாதிபதியின் செயலராக பதவியேற்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்படவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டாரில் தூதுவராகப் பணியாற்றும் ஏ.எஸ்.பி.லியனகே நேற்றைய தினம் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர் நேற்றைய தினம் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக, மாகாண ஆளுநராகவே தன்னை ஜனாதிபதி நியமிக்கவிருந்ததாகவும், எனினும் அதற்கான வெற்றிடம் இல்லாத காரணத்தினாலேயே கட்டாருக்கான தூதுவராக நியமித்தார் என்றும் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் அவர், கட்டாருக்கான தூதுவராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment