மஹிந்தவின் ஒருநாள் வாழ்க்கை!
இலங்கையின் அரசியலில் அதிகம் மக்கள் வரவேற்பை பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 24 மணித்தியாலங்களை எவ்வாறு செலவிடுகின்றார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி செயற்பாட்டாளர், தொழிற்சங்க உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் இறுதியாக இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியாக செயற்பட்டு இன்னமும் அரசியலில் ஈடுபடும் கதாபாத்திரமாக மஹிந்த காணப்படுகின்றார்.
இவ்வளவு பிரபலமான கதாபாத்திரமான மஹிந்த தனது ஒரு நாள் வாழ்க்கையை எவ்வாறு செலவிடுகின்றார் என வார இறுதி பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச காலை 5 முதல் 5.30 மணிக்கு இடையில் நித்திரையில் இருந்து எழும்புகின்றார்.
காலை 5.30 முதல் 7.30 வரையிலான இரண்டு மணித்தியால காலப்பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றார்.
உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் தினமும் இந்த நடவடிக்கையை தவற விட மாட்டார்.
இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடும் அவர் அந்த காலப்பகுதியினுள் முக்கியமான நடவடிக்கை ஒன்றையும் மேற்கொள்வார்.
அன்றைய தினங்களில் பிறந்த நாளைக் கொண்டாடும் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு வாழ்த்து தெரிவிப்பதே அந்த நடவடிக்கையாகும்.
பல சந்தர்ப்பங்களில் அந்த நபர்களுக்கு கிடைக்கும் முதலாவது அழைப்பும் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பாகும்.
உடற்பயிற்சிக்கு இடையில் ஒரு கோப்பை கஞ்சி பருகுவார். அதன் பின்னர் தன்னை சுத்தப்படுத்தி கொள்ளும் அவர் கடவுளை வணங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
காலை 8 மணிக்கு காலை உணவு உட்கொள்ளும் மஹிந்த, சிகப்பரிசி சோறு அல்லது தானிய வகைகளை உண்பதில் அதிகம் விருப்பம் கொண்டவராகும். சிகப்பரிசி சோறுடன் சம்பல் உணவாக பெற்று கொள்வதற்கு மஹிந்த விசேட விருப்பம் கொண்டுள்ளார்.
காலை உணவின் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் மஹிந்த தினசரி பத்திரிகையை வாசிக்க தவற மாட்டார்.
அதனை தொடர்ந்து தனக்கு கிடைத்துள்ள கடிதம் மற்றும் மக்கள் கோரிக்கைகளை தவறாமல் வாசித்து விட்டு அதற்கு அவசியமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஊழியர் சபைக்கு அறிவிப்பு விடுப்பார்.
பின்னர் தன்னை சந்திக்க வரும் மக்களை சந்திக்கும் மஹிந்த அவர்களின் கோரிக்கை, யோசனை மற்றும் சிக்கல்களுக்கு செவிமடுப்பார். அன்றைய தினத்திற்குரிய வேலைத்திட்ட பட்டியலின் முக்கிய விடயங்கள் என்ன என்பதனை அவரே தீர்மானிப்பார்.
விசேட வேலைகள் இல்லாத நாட்களில் பகல் உணவினை தொடர்ந்து மாலை 2 மணியளவில் சிறிய நித்திரை ஒன்றுக்கு செல்வது மஹிந்தவின் வழக்கமாகும்.
பகல் உணவிற்கு சிகப்பரிசி சோறுடன் மரக்கறிகள் இரண்டு மூன்றுடனான சாதாரண உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு அவர் விருப்பம் கொண்டுள்ளார்.
இரவு 8.30 மணியளவில் இரவு உணவு உட்கொள்ளும் மஹிந்த ராஜபக்ச தொலைகாட்சியில் செய்தி பார்ப்பதனை மறந்து விட மாட்டார். பின்னர் 10.30 - 11 மணியளவில் நித்திரைக்கு செல்வார்.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு நேரமேனும் ஒன்றாக உணவு உட்கொள்ள தவற மாட்டார். பல நேரங்களில் குடும்ப விடயங்கள் உணவு மேசையிலேயே பேசப்படும்.
வாகனங்களில் தூர பயணங்கள் செல்லும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது புத்தகம் வாசிப்பது மஹிந்தவின் பழக்கமாகும். மேலும் வாகனங்களில் பயணிக்கும் போது இசையை ரசிப்பதனையும் விருப்பம் கொண்டுள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ச வாரத்திற்கு இரண்டு நாட்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுவார். இதுவே மஹிந்தவின் ஒரு நாள் செய்பாடாக கருதப்படுகின்றது.
இந்த பட்டியல் அவர் எங்கிருந்தாலும் மாற்றமடையாமல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment