அல் ஜஸீரா பத்திரிகையில் Ramadan al-Anzi ரமடான் அல் அன்சி என்னும் கட்டுரையாளர் அல்லாஹ்வை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளை வைத்து சவூதி நாட்டு மன்னரைப் பாராட்டியுள்ளார். அதில் அந்த கட்டுரையாளர் மன்னரான சல்மானை மிகவும் பொறுமையானவர் மற்றும் ஷ்தீத் அல் இகாப். ("Haleem", or forbearing, and "Shadeed al-Eqab",) என குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு வார்த்தைகளும் அல்லாஹ்வை குறிக்கும் வார்த்தைகள் மன்னரை புகழ்ந்து கூறுவது சாதரணமான ஒன்று தான் என்றாலும், அதற்காக மன்னரை அல்லாஹ்வுடன் ஒப்பிட்டு கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று எனவும் இதனால் மன்னர் சல்மான் அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பத்திரிக்கையின் மீது எதிரான நடவடிக்கையும் பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கை மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top