கல்முனை மாநகரத்தில் எவ்வளவுதான் படித்தவர்கள் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையிலும் தூரநோக்கு சிந்தனையிலும் பின்தங்கியவர்களாகவே செயற்படுகின்றனர் அதனால்தான் கல்முனை மாநகரம் எல்லாத்துறையிலும் தொடர்ச்சியான பின்னடைவினை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலைமையினை சீர்செய்து வளமுள்ள கல்முனை மாநகரத்தினை ஒரு குறுகிய காலத்துக்குள் கட்டியெழுப்புவதற்கு நம் அனைவரும் தத்தமது குறுகிய தனிப்போக்கு சிந்தனையினை கைவிட்டு ஒற்றுமையுடனும் தூரநோக்கு சிந்தனையுடனும் செயற்படவேண்டும். மாறாக தத்தமது வாழ்கையினைமட்டும் பாதுகாத்துக்கொள்வதற்காக குறுகிய சுயநல சிந்தனைகளுடன் செயற்பட்டால் அது தொடர்ந்தும் வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கும் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கும் தீனிபோடுவதாக அமைந்துவிடும்.
மட்டுமல்லாமல் நம்மில் அனைவரும் தற்போது அறியாமையினாலும் குறுகிய சுயநல பிற்போக்கு சிந்தனையாலும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அனர்த்தங்களை வளரும் தத்தமது பிள்ளைகளும் அவர்களின் சந்ததிகளும் சுமக்கப்போகின்றார்கள்.
நமது நாட்டில் எழுத்தறிவு 92 .63 சத விகிதத்தினை எட்டியிருந்தாலும் உயர்கல்வியில் இன்னும் 12 சத விகிதத்துக்குமேல் தாண்டவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் அப்படியிருக்கும் போது கல்முனை மாநகரத்தில் உயர் கல்வியினை கற்பவர்களின் நிலைப்பாடு இன்று 8 சத விகிதத்துக்கும் குறைவாகவுள்ளது காரணம் வங்குரோத்து அரசியல்வாதிகளினதும் பொறுப்பற்ற அதிகாரிகளினதும் பிற்போக்கு செயற்பாட்டினால் கல்முனை மாநகரத்தின் பொருளாதார சீர்குலைவு காரணமாக தத்தமது பிள்ளைகளை உயர்கல்வியினை கற்பிக்கவைக்க தொழில் வருமானம் போதாமையினாலும் தத்தமது வாழ்வாதாரத்துக்காகவும் தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும்.................
Samsudeen Yoonuslebbe










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top