ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு

பங்களாதேஷில் அமோக வரவேற்பு


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள்இன்று 13 ஆம் திகதி முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பதனால், அவருக்கு கோலாகலமானவரவேற்பினை அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் அவர்கள் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதைவேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டது.
மேலும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேசிய கொடிகளினால் டாக்கா சர்வதேச விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை இருநாடுகளுக்குமிடையிலான நட்பினை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் லால் கிரேரு, வசந்த அலுவிகார, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, நிசாந்த முதுஹெட்டிகம ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top