எழுத்தூர்
நீர் குடிநீர்
வழங்கல் திட்டத்தை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
ஆரம்பித்துவைத்தார்.
நகர
திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
மற்றும் இராஜாங்க
அமைச்சர் சுதர்ஷனி
பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
பிரதம அதிதியாக
கலந்கொண்டு நேற்று இவ்வாறு பொது மக்களின் பாவனைக்காக
திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
2020ஆம் ஆண்டில் சகலருக்கும் பாதுகாப்பான
குடிநீரை வழங்கும்
குறிக்கோளுக்கமைய, ஆசிய அபிவிருத்தி
வங்கி மற்றும்
இலங்கை அரசாங்கத்தின்
நிதி ஒதுக்கீட்டின்
மூலம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின்கீழ்,
நகர திட்டமிடல்
மற்றும் நீர்
வழங்கல் அமைச்சு
மற்றும் தேசிய
நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தப்படும் உலர் வலய நகர நீர்
மற்றும் சுகாதார
திட்டத்தின் கீழ் எழுத்தூர் நீர் உள்வாங்கும்
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
2,200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும்
இத்திட்டத்தின் மூலம், மன்னார் மாவட்ட மக்களின்
குடிநீர் வழங்கல்
மேலும் விரிவுபடுத்தப்பட்டு
59 ஆயிரம் மக்கள்
பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின்
இலங்கைக்கான பணிப்பாளர் ஸ்ரீ விடோவதி, , பாராளுமன்ற
உறுப்பினர் காதர் மஸ்தான், எம்.ஐ.எம். மன்சுர்,
சார்ள்ஸ் நிர்மலநாதன்,
வட மாகாண
சபை உறுப்பினர்
எச்.எம்.எம். ரயீஸ்,
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்களான {ஹனைஸ் பாருக், எம்.பி.
பாருக், தேசிய
நீர் வழங்கல்
வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதி
தலைவர் ஷபீக்
ரஜாப்தீன் உட்பட
மக்கள் பிரதிநிதிகள்
பலர் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment