லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் நிலையம் நாளை 9ம் திகதி காலை 11 மணிக்கு சாய்ந்தமருது -கல்முனை பகுதியில் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியூதீனும் கெளரவ அதிதியாக கிரமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் என நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி உமேஷ் கெளதம் தெரிவித்தார் .

இங்கு நிறுவனத்தின் வாகனங்களுக்கான தரிப்பிடம் சாய்ந்தமருதிலும் கல்முனை பிரதான வீதியில் காட்சியறையும் கல்முனை நகரத்தில் புதிய சேவை நிலையமும்  திறந்து வைக்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top