நாட்டின் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது, முன்னாள் நீதி அமைச்சராக இருந்த ஒருவர் இப்படி செய்திருப்பது மிகவும் கவலைக்குரியது என சிங்கள அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அர்ஷாத் காரியப்பர் பௌண்டஷன் பிரதான அனுசரணையில் நடைபெற்ற 'லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017' இரவுநேர மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பௌசி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். இந்நிகழ்விலேயே இவ்வாறு தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுபலசேனா மற்றும் ராவய அமைப்புக்களும் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்த வேளை தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் அமைச்சராக உள்ள ஒருவர் தேசிய கொடி ஏற்றப்படுகின்ற பொழுது இதுகுறித்து அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும், அல்லது அதற்கு மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment