நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒரு மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

‘மக்கள் குரல்’ நேரடி கேள்வி-பதில், அமைச்சரின் பேஸ்புக் ஊடாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில், கேட்கப்பட்ட கேள்விக்கே, அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் தொடர்ந்து பதில் அளிக்கையில்,

“தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைத் தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகாரவுடனும் இது தொடர்பில் நாம் பலமுறை பேச்சு நடத்தியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அந்தப் பள்ளிக்கான காணியையும்

இன்ஷா அல்லாஹ் தம்புள்ளை பள்ளிக்கான காணியையும், பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கான காணியையும் ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் காணிக்கு 20 பேர்ச் காணி தருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், பள்ளி நிர்வாகம் அதன் அளவு பிரமாணத்தை அதிகரித்து தரவேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளது.

இது தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்ததும் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என, அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top