86 கொலைகள் செய்த ஆண் நர்ஸ்
ஜெர்மனியில் அதிரவைக்கும் சம்பவம்
ஜெர்மனியைச்
சேர்ந்த ஆண் தாதி ஒருவர்
அவர் சிகிச்சை அளித்த 86 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது
உறுதியாகியுள்ளது.
இவர்
தற்போது ஆயுள் தண்டனை கைதியாக
சிறையில் உள்ளார். அவர் வேலைபார்த்த இரண்டு
மருத்துவமனைகளில் இரண்டு நபர்களை விஷ
ஊசி போட்டு கொன்ற வழக்கில்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில்
உள்ளார். மேற்படி
வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் பலரை
மருந்துகளை மாற்றிச்செலுத்தி கொலை செய்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.
இவரின் பணிக்காலத்தில் 130க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அவர்களை உடல்களை ஆய்வு செய்ய வழக்கு நடந்து வரும் ஜெர்மனியின் ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று வெளியாகிய ஆய்வு முடிவின் படி 86 நோயாளிகள் 'நீல்ஸ் ஹோஹெல்' என்கிற அந்த ஆண் தாதி குறிப்பிட்டிருந்த ஐந்து மருந்துகளின் மூலமாகத்தான் இறந்துள்ளதாக உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மேற்கொண்டும் 41 ஆய்வகச் சோதனைகள் நடந்து வருகின்றது. அவையும் வந்துவிட்டால் ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப்பெரிய 'தொடர் கொலைகாராக' நீல்ஸ் கருதப்படுவார் என்று கூறுப்படுகிறது.
0 comments:
Post a Comment