சாய்ந்தமருது நகர சபை

சம்சுதீன் யூனுஸ் லெப்பையின் முக நூல் பதிவுக்கு

டாக்டர் எஸ். நஜிமுதீனின் பதில் பதிவு

யாரப்பா அந்த பிரதேசவாதிகள்?

SIHABDEEN NAJIMUDEEN·SUNDAY, AUGUST 20, 2017


சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பான எனது குறிப்பினை கண்டித்து சம்சுதீன் யூனுஸ் லெப்பை என்பவர் ஒரு குறிப்பினை பதிவிட்டுள்ளார். பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. இவர் யார் என்று எனக்கு அவ்வளவாக தெளிவில்லை. இருந்தாலும் டாக்டர்.யூசுப் உடைய சகோதரர் ஆக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். அப்படி இல்லையானால் மன்னிக்கவும்.
நான் கல்முனைக்குடியில் பெண்ணெடுத்ததால் கல்முனையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற எதையும் கண்டு கொள்ளக் கூடாது என்று அவர் எதிர் பார்க்கிறார் போலும். நான் எதோ நாடு விட்டு நாடு வந்து பணம் சம்பாதிக்க வந்தது போல் அவரது குறிப்பு இருக்கிறது. இவர்களைப் போல் போக்கிடம் கெட்டவன் நான் என நினைத்து விட்டார்கள் போலும். எனக்கு அல்லாஹ் எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக்கி தந்துள்ளான்.எனது நாட்டில் எனது வருமானம் இந்த வெளிநாட்டில் சம்பாதிப்பதை விட அதிகம்.
என்னுடைய தணலும் தகிப்பும் என்கின்ற நூல் இவரது எல்லா குற்றச் சாட்டுக்கும் பதில் சொல்லும்.
பின்னூட்டம் இட்ட சில பேர் எல்லை மீறி இருக்கிறார்கள்.நான் மன நோயாளியாகவே இருந்து விட்டு போகின்றேன்.அரச திணைக்களத்தில் முப்பது வருட காலம் இந்த மனநோயாளியிடம் பல வைத்தியசாலைகளின் நிர்வாகப் பொறுப்பு இருந்தது.
மிகச் சிறந்த வைத்தியன், மனித நேயமிக்கவன் என்றெல்லாம் கல்முனைக்குடி மக்களாலேயே பாராட்டப்பட்டவன் இந்த கிறுக்கன்.
நான் எந்த இடத்தில மக்களைப் பற்றி கூறி இருக்கிறேன்.எல்லா ஊரிலும் எல்லா வித மக்களும் வாழ்கிறார்கள்.ஒரு சில ஊரில் மட்டும் தான் மேலாதிக்க வாதம் தலை தூக்கி ஆடுகிறது. “நாம் கல்முனைக்குடிஎன்றொரு இயக்கம் இருந்து நடாத்திய சித்து விளையாட்டுகளை நாம் பார்த்தோம்.
இந்த விளையாட்டுக்களில் பங்கு பற்றிய மனிதர்களை நான் பட்டியலிட்டால் நீங்கள் தலை சுற்றி போவீர்கள். சாய்ந்தமருத்துக்கு ஒரு வைத்தியசாலை தேவையில்லை என்று ஆடவில்லையா.கன்னி வீதியை எல்லையாக்கும் பிரேரணை கொண்டு வரப்பட வில்லையா.எல்லை மாற்றப் பட்டு இருப்பது உண்மை யில்லையா.கல்முனை தெற்கு படகுத்துறை என்றும் கல்முனை தெற்கு தொழிற்பயிற்சி நிலையம் என்றும் பெயர் பலகை நடப்படவில்லையா. இப்போது வட்டாரங்கள் எப்படி பிரிக்கப் பட்டுள்ளன.
என்னய்யா பேசுகிறீர்கள்.இப்பொழுதும் உங்கள் எல்லா வாதங்களும் இன்னுமொரு மக்கள் மீதும் இனக் குழுமங்கள் மீதும் உங்களது மேலாதிக்கத்தை செலுத்துவது என்பதாகவே இருக்கிறதே ஒழிய உங்கள் பக்கத்து வேறு நியாயங்களை பேசுவதாக காணோம்.
சாய்ந்தமருது மக்களை பயமுறுத்துவதும் அந்த மக்களுக்காக பேசுகின்ற எழுதுகின்ற மனிதர்களை அவர்களது சொந்த விடயங்களை பேசி மௌனியாக்க முனைவதுமாகவே எல்லோரது செயற்பாடுகளும் இருக்கின்றன.
எனக்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அநீதிகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.அது என்னை எந்த அளவு பாதித்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும்,அந்த அநியாயங்கள் இந்த நஜிமுதீன் உடைய குறைபாடுகள், பலவீனங்கள் அல்லது தகுதியீனங்கள் காரணமாக அரங்கேற்றப்பட்டிருந்தால் அவற்றை வெளிப்படுத்த  வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டிருக்காது.ஆனால் அவை சாய்ந்தமருதான் என்ற காரணத்துக்காக மட்டுமே அரங்கேற்றப்பட்டன என்பதனால்தான் அவற்றை வெளியிட வேண்டிய தேவை எனக்கு வந்தது.
சம்பந்தப்பட்டோரை இல்லையென மறுக்கச் சொல்லுங்கள் என்று நான் சவால் விடுகின்றேன்.அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
நான் ஊர் பற்றை பற்றி என்றைக்கும் பேசவில்லை.ஏனென்றால் நான் ஊரை துறந்து நீண்ட நாட்களாகி விட்டன. நியாயத்தை சொல்ல வேண்டும். ஆடுகின்ற வரை ஆடிவிட்டு இப்போதும் அடங்குவதாக இல்லை.பயமுறுத்துகின்ற வேலையிலும் கேவலப் படுத்துகின்ற தொனியிலும் எழுதுவதும் பின்னூட்டமிடுவதும் எங்களை எந்த விதத்திலும் பின்னடைய வைக்காது.
யார் அந்த பேய் மஸ்தான் காக்காவோ தெரியவில்லை.எனது சொந்த மருமகனார் அல்தாப் மொஹிடீன் கூட ஆமோதித்திருப்பது தெரிகிறது வந்த உறவு பெரிதாக தெரிகிறது போல.
அதெல்லாம் இருக்க ஏன் இந்த விடயம் யூனுஸ் லெப்பை குடும்பத்துக்கு ரொம்பவுமே வலிக்கிறது. இப்பொழுதாவது அடங்குவோம் என்று இல்லை.
 டாக்டர் எஸ். நஜிமுதீன்

பிற்குறிப்பு; எனது ஊர் என்று நான் கல்முனையைத்தானே குறிப்பிட்டிருக்கிறேன்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top