அசிங்கமாக இருந்தால் ஆசிரியர் பணி செய்யமுடியாது



வசீகர தோற்றத்துடன் இல்லாமல், முகப்பரு, மச்சம், தோல் நோய் இருந்தால் ஆசிரியர் பணி கிடைக்காது என ஈரான் அரசு அறிவித்துள்ளது இது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் கல்வித்துறை நூற்றுக்கணக்கான நோய்கள் மற்றும் நிலைமைகளை விவரிக்கும் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ‘மலட்டுத்தன்மை, பித்தப்பையில் கல், தொற்றுநோய், புற்றுநோய் உள்ள பெண்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணி இல்லை.

advertisement பார்வை கோளாறு, மாறுகண் இருந்தால் ஓவிய ஆசிரியராகப் பணியாற்ற முடியாது. 20 பற்களுக்கு குறைவாக இருப்பவர்களுக்கும் முகத்தில் மரு, மச்சம், முடி உள்ளவர்களுக்கும் ஆசிரியர் பணி கிடையாதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் ஆசிரியராக பணியாற்ற அனுமதியுள்ளது. ஆனால், அவர்கள் தங்களது தலைமுடியை ஸ்கார்ப்பால் மூடிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், ‘ஆசிரியரின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதற்காக கட்டுபாடுகள் விதிக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு தெளிவான மனித உரிமை மீறல். இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்கள் ஈரானில் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள்எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போதைய உத்தரவு குறித்து விசாரிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானியின் ஆலோசகர் மொலாவர்டி தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top