பிறந்த ஊரின் நலன் முக்கியமா?
கட்சியின் நலன் முக்கியமா?
இளைஞர்கள் கேள்வி
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தொடர்பாக சாய்ந்தமருது
மக்கள் ஒன்றுபட்டு சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் அமைப்பினரின்
தலைமையில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த
முக்கியஸ்த்தர்களில் சிலர் மக்களின் இக்கோரிக்கை தொடர்பாக இடம்பெறும் எந்தக் கூட்டத்திலும்
கலந்து கொள்வதில்லை என இளைஞர்கள்
குற்றம் சுமத்துவதுடன் இவர்களுக்கு பிறந்த ஊரின் நலன் முக்கியமா? இல்லை கட்சியின் நலன் முக்கியமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி அதிகாரத்தைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கமாக சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் அமைப்பினரின் தலைமையில் பல கூட்டங்களும்,
கருத்தரங்குகளும் இடம்பெற்றிருந்த நிலையில் ஒரு கூட்ட்த்தில் கூட இவர்கள் கலந்து
தங்களது ஆதரவையோ அல்லது அபிப்பிராயங்களையோ தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்
சாட்டுகின்றனர்.
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக்க் கொண்டுள்ள முன்னாள் மாநகர
சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ. மஜீத், எம்.ஐ.எம்.பிர்தெளஸ், ஏ.பஸீர், நிஸார்தீன், மெளலவி
எஸ்.எச்.ஆதம்பாவா, ஆகியோர்களைச் சுட்டிக்காட்டியே இளைஞர்கள்
இக்கேள்வியை எழுப்பி வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர் என
பிரமுகர்கள் வருகை தரும்போது ஓடிவந்து முன் ஆசனத்தைப் பிடித்து அமர
முண்டியடிக்கும் சிலர் ஊரின் நலன் குறித்து சிந்திக்கும் கூட்டங்களில்
பங்குபற்றுவதாக இல்லை என்றும் இவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் ஆத்திரத்தை
வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது
0 comments:
Post a Comment