ஜனாஸா நல்லடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மறைந்த அமைச்சர் முஸ்லிம் சமுகத்திற்கு செய்த சேவைகள் மற்றும் அவரது பணிகள் தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அனுதாபச் செய்தியில் தெரித்தார்.
ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் நேற்று காலை அமைச்சரின் வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகச் சென்று தனது அனுதாபங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இதன்போது இணைந்துகொண்டனர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.