முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி வளர்த்துவிட்ட
கல்முனை,சம்மாந்துறை, பொத்துவில் தொகுதி
மக்களே சிந்தியுங்கள்!
மட்டக்களப்பு
மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுவதைக் கண்டு அம்பாறை மாவட்ட மக்கள் பரந்த மனதுடன் சந்தோஷம் அடைகின்றார்கள்.
அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்
காங்கிரஸை உருவாக்கி வளர்த்துவிட்ட கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளும் அபிவிருத்தி அடைய வேண்டும் என இப்பிரதேச மக்கள்
எதிர்பார்க்கின்றார்கள்.
மட்டக்களப்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறை
சார்ந்த அமைச்சர்கள் அங்குள்ள அரசியல்வாதிகளால் அழைத்து வரப்படுவது போன்று அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கு எவரும்
அழைத்து வரப்படுவதாக இல்லை. அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் இல்லை.
கிழக்கு மாகாண முதலமைச்சர் இம்மாகாணத்திலுள்ள மூன்று
மாவட்டங்களுக்கும் முதலமைச்சரா? இல்லை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரம்
முதலமைச்சரா என்ற ஐயப்பாடு அவரின்
செயல்பாடுகளிலிருந்து எழுகின்றதாக மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
ஏறாவூர்
வாவிக்கரை அருகே
காணப்பட்ட குப்பை
மேட்டை அழகிய
சுற்றுலாத் தகவல் மையமாக மாற்றியமைப்பதற்கான முதலமைச்சரின் யோசனைக்கான கோரிக்கைக்கு அமைய
100 மில்லியன் ரூபாசெலவில் நிர்மாணிக்கப்படவுள்ள
சுற்றுலாத் தகவல்மையத்திற்கான அடிக்கல்
நாட்டு விழா
இன்று 20 ஆம் திகதி கிழக்கு முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர்
அஹமட் தலைமையில்
இடமபெற்றது.
இதன்போது
சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,ஶ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப்
ஹக்கீம்.சுகாதாரப்
பிரதியமைச்சர் பைசல் காசிம் மற்றும் மாகாண
சுகாதார அமைச்சர்
ஏ எல்
எம் நசீர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment