விஜயதாச ராஜபக்ஸவை
பதவியிலிருந்து நீக்குங்கள்!
ஜனாதிபதியிடம்
பிரதமர் அறிவிப்பு
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ வகிக்கும் அமைச்சுப்
பொறுப்புகளிலிருந்தும் நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்துக்கு
அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர்
ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (22) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சரவை ஒழுங்குகளை மீறும் வகையில்
தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். அவருடைய கருத்துகளை மீளப்பெற்றுக்கொள்ளும்
பொருட்டு நேற்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கட்சியின் செயற்குழு இது தொடர்பில் தவிசாளர் மலிக்
சமரவிக்கிரமவுடன் கலந்தாலோசித்தது. தனது கருத்துகளை மீளப் பெற்றுக்கொள்வதாக
தவிசாளரிடம் அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார். எனினும் அதன்படி அவர்
நடந்துகொள்ளவில்லை. இதன்காரணமாக செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக அனைத்து
அமைச்சுகளிலிருந்தும் விஜயதாச ராஜபக்ஸவை நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு விரோதமாக கருத்து
வெளியிட்டமை, மற்றும் ஊழல்கள்
குறித்த விசாரணைகளை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து
விஜயதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய
கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment