பாரிஸ் அதிசொகுசு ஹோட்டலில்
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி!
ஆதாரம் வெளியானது
யுனெஸ்கோ
வெசாக் கொண்டாட்டத்தில்
கலந்து கொள்வதற்காக
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவின்
மனைவி ஷிரந்தி
ராஜபக்ச பிரான்ஸ்
சென்றிருந்தார்.
2014ஆம் ஆண்டு மே மாதம்
20ஆம் திகதி
முதல் 24 ஆம்
திகதி வரையான
காலப்பகுதியில் இந்த யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டங்கள்
இடம்பெற்றுள்ளது.
இதற்காக
அவர் தனது
உறவுக்கார பெண்ணான
டேசி பொரஸ்ட்
என்பவரையும் அந்த விஜயத்தில் இணைத்து கொண்டிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது
ஷிரந்தி ராஜபக்ச உட்பட குழுவில் தூதுவ அதிகாரிகள் இருவரும் இருந்துள்ளனர். அவர்கள் நால்வருக்குமான அறை மற்றும் உணவுக் கட்டணமாக 16,175,465.76
ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த சுற்றுலா பயணத்திற்கு மேலதிகமாக தனிப்பட்ட பயணங்கள் சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த அனைத்து தனிப்பட்ட பயணங்களுக்கான வாகன வசதிகள் பெற்றுக் கொள்ளும் போது அதி சொகுசு வாகனங்களையே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக 7,593,061.56
ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவினர் தங்குவதற்காக பெற்றுக் கொண்ட ஹோட்டல், உலகிலேயே அதிகமான கட்டணம் செலுத்தப்படும் ஹோட்டலாகும்.
0 comments:
Post a Comment