சிங்கப்பூர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக

செப்டம்பர் 23-ம் திகதி தேர்தல்



(இடமிருந்து வலம்) சாலே மரிக்கான், ஹலிமா யாக்கோப், பரித் கான்)

சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு எதிர் வரும் செப்டம்பர் 23-ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக, மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்துள்ளார்.

இதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் 12-ம் திகதிவரை பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் விபரம் 13-ம் திகதி அறிவிக்கப்படும்.


இதற்கிடையில், போட்டியில் இருந்து இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, விலகி கொண்டாலோ புதிய ஜனாதிபதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி நடைபெறாதபட்சத்தில் 23-ம் திகதி நடைபெறும் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top