சாய்ந்தமருது நகர சபை
டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களின் பதிவு
கல்முனைத் தொகுதி பாராளுமன்ற
உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான
சகோதரர் எச்.எம்.எம்.
ஹரீஸ் அவர்களே!
புனிதமான
ஹஜ் கடமையை
மேற்கொள்ள பயணமாகும்
உங்களின் புனிதமான
ஹஜ் கடமையை
வல்ல அள்ளாஹ்
பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!
இந்த
நேரத்தில் உங்களோடு
பகிரக்கூடாது என்றாலும், இந்த நேரத்தில் உங்களின்
மனச்சாட்சி பிழையாக நடந்துகொள்ள உங்களை அனுமதிக்காது.
காரணம் நீங்கள்
செல்லவிருக்கின்ற இடத்தின் மகிமை அப்படியானது என்ற
காரணத்தினால் நான் இதனைப் பகிர்ந்தேயாக வேண்டும்.
சரி.
விடயத்துக்கு வருகிறேன்.
இப்பொழுது
உங்களின் தொகுதியில்
ரணகளமாகிப் போயிருக்கும் விடயம் தான் சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி சபை. ஆரம்பத்தில் அதில் உங்களுக்கு
உடன்பாடு இல்லாதிருந்தாலும்,
காலவோட்டத்தில் அள்ளாஹ் உங்களின் மனதில் மாற்றத்தை
ஏற்படவைத்தான். அதன் காரணமாக உங்களின் தலைவரோடு
சேர்ந்து அதற்கான
முயற்சியைத் தொடங்கினீர்கள். பல அழுத்தங்களுக்கு மத்தியிலும்
முயற்சி தொடர்ந்ததாக
நாங்கள் நம்பினோம்.
கடந்த
தேர்தலின் போது,
பிரதம மந்திரியை
அழைத்து வந்து
பகிரங்க மேடையில்
வைத்து வாக்குறுதி
வழங்க வைத்தீர்கள்.
உங்களின் தலைவரும்,
அமைச்சருமான றவுப் ஹக்கீம் பல தடவைகள்
வாக்குறுதி அளித்திருக்கிறார். நீங்களும்
பல தடவைகள்
பகிரங்கமாக வாக்குறுதி அளித்திருக்கிறீர்கள்.
இறுதியாக நடைபெற்ற
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும்
வைத்து விரைவில்
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை
மலரப்போகிறது என்றீர்கள். நிந்தவுரில் அண்மையில் நடைபெற்ற
உங்களின் கட்சிக்கூட்டத்தில்
வைத்து ஒருவர்
இது தொடர்பாகக்
கேட்டபோது, இந்த விடயத்தைக் கவனிக்கும் பொறுப்பை
உங்களிடமே ஒப்படைத்திருப்பதாக
தலைவர் றவுப்
ஹக்கீம் பகிரங்கமாகவே
சொல்லியிருந்தார்.
இவை
அத்தனையும் உண்மை என்பதை இந்த நேரத்தில்
நீங்கள் மறுக்க
மாட்டீர்கள். காரணம், நீங்கள் செல்லவிருக்கும் இடத்தின்
மகிமை அப்படியானது.
இந்த
சூழ்நிலையில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி
சபைக்கான அனைத்துவிதமான
நடவடிக்கைளும் நிறைவடைந்து, உத்தியோகபூர்வமாக
வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவிருந்தது என்பதையும்
நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.
காரணம் நீங்கள்
செல்லும் இடத்தின்
மகிமை அப்படியானது.
இருந்தபோதிலும்,
எமது மக்களின்
நியாயபூர்வமான அந்தக்கோரிக்கையை நிறைவேறாமல்
தடுப்பதற்கு ஒரு கூட்டம் மிகுந்த பிரயத்தனம்
எடுக்கிறது. அதனையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.
காரணம் நீங்கள்
செல்லும் இடத்தின்
மகிமை அப்படியானது.
சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி சபை வழங்கப்படுவதனால் யாருக்கும் எந்தத்
தீங்கும் ஏற்படாது
என்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள். காரணம்
நீங்கள் செல்லும்
இடத்தின் மகிமை
அப்படியானது.
பொதுவாக,
பல தீய
குணங்களுக்கு சொந்தக்காரர்களாக அரசியல்வாதிகள்
இருக்கிறார்கள் என்றாலும், அந்த விடயத்தில் நீங்கள்
வித்தியாசமானவர் என்பதை எங்களை விட அந்த
வல்ல அள்ளாஹ்வே
அறிவான். அப்படியான
நீங்கள் வாக்குறுதி
விடயத்தில் ஏனைய அரசியல்வாதிகளைப்போல நடந்துகொள்ள மாட்டீர்கள்
என்றும் நம்புகிறோம்.
அதனையும் அள்ளாஹ்வே
அறிவான். புனித
ஹஜ் கடமையை
நிறைவேற்ற நாடியிருக்கும்
உங்களின் மனதில்
அள்ளாஹ்வின்பால் நிச்சயமாக அச்சவுணர்வு இருக்கும்.
இறுதியாக,
வாக்குறுதிக்கு நமது மார்க்கத்தில் எத்தகைய பெறுமதி
இருக்கிறது என்பதை நான் சொல்லி அறியும்
நிலையிலும் நீங்கள் இல்லை.
பல
தடவைகள் நீங்கள்
அளித்த வாக்குறுதிகள்
உங்களின் மனதிற்குள்
புதைந்து கிடக்கையில்,
மலரவிருந்த சபையைத் தடுப்பதில் உங்களுக்குப் பங்களிப்பு
இருக்குமாக இருந்தால், அந்தப் புனிதமான கஃபத்துல்லாவில்
நீங்கள் காலடியை
வைக்கும் போது
உங்களின் மனச்சாட்சி
எந்தளவிற்கு உங்களை உறுத்தும் என்பதையும், உங்களின்
புனிதமான ஹஜ்
அள்ளாஹ்விடத்தில் எந்த நிலையை அடையும் என்பதையும்
ஒரு தடவை
நினைத்துப் பாருங்கள்.
முடிவாக,
அவ்வாறு நீங்கள்
இந்த விடயத்தில்
எங்களுக்குத் துரோகம் இழைத்திருந்தால், அதனை அந்த
வல்ல அள்ளாஹ்
பார்த்துக் கொள்ளட்டும் என்று இருகரமேந்தி அழுது
மன்றாடி பிரார்த்தித்தவனாகவும்,
இந்த
விடயத்தில் நான் யாரையாவது மனதால் பாதிக்கப்பட
வைத்திருந்தால் என்னை மன்னிக்கும்படியும்,
எமது
ஊருக்கான உள்ளூராட்சி
சபை விடயத்தில்
இருக்கும் தடைகள்
நீங்கி விரைவில்
அது மலர
வேண்டுமெனவும் அந்த வல்ல அள்ளாஹ்வைப் பிரார்த்தித்து,
சாய்ந்தமருது
உள்ளூராட்சி சபை தொடர்பாக நான் 2013 ஆம்
ஆண்டிலிருந்து எழுதிய எழுத்துகளுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி
வைக்கிறேன்.😭😭😭
குறிப்பு-
தயவுசெய்து யாரும் பின்னூட்டம் அல்லது கருத்து
என்ற பெயரில்
தனிப்பட்ட அல்லது
அரசியல் குரோதங்களை
வைத்து யாருடைய
மனதையும் புண்படுத்தும்
விதமாக எதுவும்
எழுதி எனது
உணர்வைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
0 comments:
Post a Comment